சென்னை : நடிகை சமந்தா 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பாலிவுட்டில் தி பேமிலி மேன் என்ற வெப் தொடரில் நடித்ததன்மூலம் பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் சமந்தாவிற்கு கிடைத்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்னும் சில தினங்களில் இவரது சாகுந்தலம் படம் ரிலீசாக உள்ளது.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரவேற்பை பெற்றார் சமந்தா. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது யசோதா படமும் வெளியானது.

யசோதா படம்

இந்தப் படத்தை இயக்குநர்கள் ஹரி -ஹரீஷ் இயக்கியிருந்தனர். இந்தப் படம் 10 நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலை எட்டியதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். படம் ஓடிடியிலும் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக புராண கால கதைக்களத்தில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சமந்தா நடித்துள்ளார்.

Read This: தளபதி 67 ஓடிடி ரைட்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்… ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 100 கோடி வசூல்

சாகுந்தலம் படம் ரிலீஸ்

சாகுந்தலம் படம் வரும் 17ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளது. இதனிடையே முன்னதாக மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா தனக்கு தானே நம்பிக்கை கொடுக்கும்வகையில் வார்த்தைகள் அடங்கிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தனக்கு தானே நம்பிக்கை

அதில் நீ விரைவில் குணம் அடைவாய் என்றும் இந்த 7 -8 மாதங்களில் நீ மோசமான நாட்களை பார்த்துள்ளாய் என்றும் சமந்தா தனக்கு தானே தெரிவித்துள்ளார். அந்த நாட்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுமாறும் தன்னை நினைத்து பெருமைப்படுமாறும் கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் நீ ஒரு வலிமையானவள் என்றும் தனக்கு தானே நம்பிக்கை தெரிவித்துள்ளார் சமந்தா.

சமந்தா இன்ஸ்டாகிராம் பதிவு

மேலும் தன்னுடைய இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், தான் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும்படியாகவும், மருத்துவமனையில் மற்றும் ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும்படியாகவும் புகைப்படங்களை சமந்தா பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களூடாகவே தற்போது தனக்கு தானே நம்பிக்கை தெரிவிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பான் இந்தியா படம்

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் சமந்தாவிற்கு, நடுவில் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவரின் சாகுந்தலம் படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

One thought on “அந்த மோசமான நாட்களை என் வாழ்வில் மறக்கவே முடியாது – சமந்தா!”

Comments are closed.