அதிகளவில் சத்துகளை கொண்டுள்ள கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னோர்கள் காலத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது. கீரைகளில் சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் ஏ, பி, சி என சத்துகள் அதிகம் உள்ளன. 

ரத்த சோகையினை குறைக்க, கண்பார்வையை அதிகரிக்க, ஒட்டுமொத்த உடல்நலனை மேம்படுத்த கீரைகள் பயன்படுகின்றன. கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 

அந்தவகையில், கீரைகளின் ராணி என்று சொல்லக்கூடிய பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

► பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு, வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

► ‘கண்பார்வைக்கு’ என்று சொன்னாலே நினைவுக்கு வருவது பொன்னாங்கண்ணி கீரை. கண்பார்வை மட்டுமின்றி, கண்கள் சிவந்துபோதல், கண் எரிச்சல் உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து கோளாறுகளுக்கும்  இந்த வகை கீரை ஒரு நல்ல தீர்வாக இருக்கும். 

► மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்தும். 

► இதயம் மற்றும் மூளையின் சிறந்த செயல்பாடுகளுக்கு உதவும். வாய் துர்நாற்றம் நீங்கும். 

► குறிப்பாக பெண்கள் சருமம் பளபளப்பாக பொன்னாங்கண்ணி கீரையை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள். 

► மேலும், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் பொன்னாங்கண்ணி கீரையை காய்ச்சி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சியடையும்.

► பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். Source link