Connect with us

அரசியல்

EIA 2020 நிறைவேற்றுவதில் அவசரம் வேண்டாம்! – நடிகர் கார்த்தி!

குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்றபோது, இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் (Environment Impact Assessment- EIA 2020) வரைவு சட்டத்தை ஏன் இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும் என்று நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகர் கார்த்தி, உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் நிறுவனராக இருக்கும் அவர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் பற்றி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் அவர் கூறியிருப்பதாவது: நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நட வளந்தரு நாடு-குறள் 739. ‘முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடையநாடுகளை சிறந்த நாடுகள் என்று கூறுவர். தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல’- மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்கள் உடைய சிறந்த நாடாக, உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில் இப்போது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை.

ஆனால், தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு (Environmental impact Assessment- EIA 2020)) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது. மலைகளும் ஆறுகளும் பல்வகை உயிரினங்களுமே நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவதும் இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல.

இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. இந்த வரைவு அறிக்கையில் ‘பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்’ என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப்பெரிய அவநம்பிக்கையையும் அச்சத்தையும் உருவாக்குகிறது.

நம் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்? மேலும் தொழிற்சாலைகளின் வகைப்படு மாற்றம், பழைய விதிமீறல்களுக்கு பிந்தைய உண்மை, மக்கள் கருத்து, பதிவுக்கான நாட்களை குறைப்பது போன்ற சரத்துகளும் அச்சுறுத்துகின்றன. குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்றபோது, இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமது தாய்மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா? நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் கோவிட்-19 எனும் அரக்கப் பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீளப் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நம் வாழ்வாதாரத்தையும் முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக் கூடிய சக்தியுள்ள இந்தச் சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?

எனவே, இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நாம் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். eia2020-moefcc@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்ட் 11, 2020 தேதிக்குள் நம் கருத்துக்களை பதிவு செய்வோம். அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வரவேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியல்

நடிகர் கருணாசுக்கு வன்னியர் சங்க மா.செ எச்சரிக்கை!

vaithi

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசம் தவறாக பயன்படுத்தப்பட்டது வன்னியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் கருணாஸ் சூரியாவிர்க்கு ஆதரவாகவும், வன்னியர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்க மாநில செயலாளர் அவரது முகநூல் பக்கத்தில் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு,

பதிலறிக்கை அல்ல
எச்சரிக்கை:
—–
லொடுக்குப்பாண்டி  கருணாஸ் எல்லாம் புத்தி சொல்ல வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் தள்ளப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  .

பாட்டாளி மக்கள் கட்சியை கண்டிப்பதற்கு கருணாஸ் போன்றவர்களுக்கு துளியளவும் அருகதை இல்லை.

ஒரு நாளைக்கு தன்னோட சாதி கட்சிக்காரங்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கு சரக்கு வாங்கி கொடுப்பதாக மேடையில் பேசி, தமிழ் சமூக இளைஞர்களை போதையின் பாதையில்  இட்டு செல்லும் நான்காம் தர அரசியல்வாதி நீ.மன்னார்குடி தயவில் எம்எல்ஏ ஆகி, அதற்கு நன்றி கடனாக கூவத்தூரில் கருணாஸ் செய்த கலைச் சேவைகளை தமிழக மக்களும் ஊடகங்களும் இவ்வுலகமும் அறிந்தவைதானே.எங்கள் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும், தன் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் குடிக்கக்கூடாது என்பதற்காக 40 ஆண்டுகாலமாக மதுவுக்கு எதிராக போராடி வருவதோடு,சட்ட போராட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 90,000 மதுக்கடைகளையும், தமிழ்நாட்டில் 3300 மதுக்கடைகளையும் மூடியது வரலாறு!!

இப்படியிருக்க சரக்கு வாங்கி கொடுப்பதை சாதனை போல பேசுவோரும், ஊற்றி கொடுத்து உற்சாகப்படுத்துவோரும் போதனை சொல்லி அறிக்கை விடுவதைப் பார்த்தால், தமிழக அரசியலின் நிலை வேடிக்கையாக உள்ளது.ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியினை நீக்கியும் பாமகவினர் வம்பிழுப்பதாக அறிக்கையில் கூறியிருக்கிறீர்கள். படக்குழுவினர் தவறை உணர்ந்து, வன்னியர்களது புனித சின்னமான அக்னி கலசத்தை கொலைகார எஸ்ஐ வீட்டு காட்சியிலிருந்து நீக்கியதாக இருந்தால், தவறு செய்தவர்கள் யார் மனதை புண்படுத்தினார்களோ அவர்களிடம் மன்னிப்பு கேட்பதும், காட்சிப்படுத்தியதன் காரணத்தை விளக்குவதும்தான் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்திருக்கும்.

இதனை குறிப்பிட்டுதான் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் 9 கேள்விகளை கேட்டு படத்தின் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு நாகரீகமான கடிதம் ஒன்று எழுதினார்கள்.அதற்கு தக்க பதில் அளித்திருக்க வேண்டிய சூர்யா, ஒரு கேள்விக்காவது உரிய விளக்கம் கொடுத்தாரா என்றால் இல்லவே இல்லை. அதை விடுத்து அவர்களுக்கு மட்டுமே ஏகோபித்த மக்களின் ஆதரவு இருப்பது போல எகத்தாளமாக பதில் தருவது என்ன ரகம்.செய்யாத குற்றத்திற்காக, சம்மந்தமில்லாத வன்னிய சமூகத்தை கொடூர கொலைகார சமூகமாக சித்தரித்த பழிகார நடிகன் சூர்யாவிற்கு இத்தனை ஆதரவு இருப்பதாக திரைக்கூத்தாடிகள் காட்டியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே இக்கொலைக்கு நீதி கிடைக்க ராசாக்கண்ணு குடும்பத்துக்கு ஆதரவாக அவ்வூரைச் சேர்ந்த வன்னிய சமூகம் தான் துணை நின்றதென்பது வரலாறு.அதை அறிந்துகொண்ட பிறகும் வரலாற்றை திரித்து ஜெய்பீம் படக் கும்பலால் பழி சுமத்தப்பட்டு மனம் நொந்து நிற்கும் மூன்று கோடி வன்னிய சொந்தங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பதை விரைவில் இந்த அடாவடி திரையுலக அறிக்கை கும்பல் உணரும்.அதை வன்னியர் சங்கம் உணர்த்தும். 

பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலியை 1 % கூட உணராதஇதுபோன்ற பலரின் வெற்று அறிக்கைகளை பலவற்றைப் பார்த்துதான்  40 ஆண்டுகாலம் இந்த இயக்கம் சமூகப்பணி ஆற்றி வருகிறது.லொடுக்குப் பாண்டியே இத்துடன் நிறுத்திக்கொள்!!இது உமக்கான பதிலறிக்கை மட்டுமல்ல.கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் கூச்சலிடும் கூத்தாடிகள் அனைவருக்குமானதுதான்..இது அறிக்கையல்ல.எச்சரிக்கை!!.

Continue Reading

அரசியல்

சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு சிகிச்சை – பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தகவல் | Bengaluru hospital report about Sasikala health | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Bengaluru-hospital-report-about-Sasikala-health

பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில் சிறையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. உடனடியாக சசிகலா இருந்த அறைக்கு விரைந்த சிறைத்துறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு மூச்சுத் திணறலுடன், காய்ச்சலும் ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க சிறைத்துறை மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு ரத்தக்கொதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. காய்ச்சல், மூச்சுத் திணறல் குறைந்திருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் தகவல்களை பகிர்ந்து கொண்ட அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஒரு வாரமாகவே சசிகலாவுக்கு வைரஸ் காய்ச்சலுக்கு சிறையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

image

இதுகுறித்து சசிகலாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் கூறுகையில், மூச்சுத்திணறல் உள்ளதால் ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிறது. ஆனால் காய்ச்சல் தற்போது இல்லை. ஆக்ஸிஜன் அளவு 79% இருந்ததால் தற்போது ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது என சிகிச்சையளித்து தெரிவித்திருக்கிறார். சர்க்கரை நோய், தைராய்டு, இருமல், காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் எனவும், சிகிச்சைக்குப்பின் அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், ரேபிட் பரிசோதனையில் நெகடிவ் என வந்தாலும், ஆர்டி- பிசிஆர் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

Source link

Continue Reading

அரசியல்

ஜோ பைடனின் மனைவி பெறப்போகும் வரலாற்றுப் பெருமைகள்! | Interesting facts about first woman of America Jill Biden | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Interesting-facts-about-first-woman-of-America-Jill-Biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் வரலாற்று பெருமைகளைப் பெறும் அமெரிக்காவின் முதன் பெண்மணி ஆவார்.

மனைவிமார்கள் தங்களது கணவர்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பார்கள். ஜில் பைடனும் அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர்தான். சில தருணங்களில் சீக்ரெட் ஏஜெண்டைப் போல, அசம்பாவிதங்களில் இருந்து ஜோ பைடனைக் காப்பாற்றியவர் ஜில் பைடன். அமெரிக்க மக்கள் இதுபோன்ற காட்சிகளை பலமுறை கண்டிருக்கிறார்கள்.

ஜில் பைடன், ஜோ பைடனின் இரண்டாவது மனைவி. தனது காதல் மனைவியும் மகளும் விபத்தில் மரணமடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு 1978-ஆம் ஆண்டில் ஜில் பைடனை ஜோ பைடன் திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தவர் ஜில் என்று ஜோ பைடன் பலமுறை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். தாயை இழந்த இரு மகன்களையும் அன்புகாட்டி வளர்த்த விதம் குறித்தும் ஜோ பைடன் உணர்ச்சி பொங்கக் கூறியிருக்கிறார்.

image

ஜில் பைடனின் இயற்பெயர் ஜில் டிரேசி ஜேக்கப்ஸ். இத்தாலிய-அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இத்தாலிய பாரம்பரியத்தில் இருந்து முதல் பெண்மணியாகப் போகும் முதல் நபர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கப் போகிறது. ஜில் பைடன் ஒரு கல்லூரிப் பேராசிரியரும்கூட. வெள்ளை மாளிகையில் குடியேறிய பிறகும் பேராசிரியர் பணியைத் தொடரப் போவதாக அறிவித்திருக்கிறார். அப்படிச் செய்தால், அமெரிக்க வரலாற்றிலேயே வேலை செய்யும் முதலாவது முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையும், ஜில் பைடனுக்குச் சொந்தமாகும். இவை மட்டுமல்ல, ஆங்கிலம், வாசிப்பு ஆகிய இரு துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்கும் ஜில் பைடன், முதல் பெண்மணிகளிலேயே அதிகம் படித்தவர் என்ற பெருமையையும் பெறப் போகிறார்.

image

குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஜோ பைடனின் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஜில் பைடன் இருந்திருக்கிறார். 1988-ஆம் ஆண்டு முதல் அதிபர் பதவியை நோக்கிய ஜோ பைடனின் பயணத்தில் ஜில் பைடனின் பங்கு கணிசமானது. அதிபர் தேர்தல் பரப்புரைகளிலும் களைப்பில்லாமல் பணியாற்றியிருக்கிறார் ஜில் பைடன். தற்போது அமெரிக்க அதிபராகிவிட்டார் ஜோ பைடன். இதுவரை ஜில் பைடன் செய்த பாதுகாப்புப் பணியை உண்மையான சீக்ரெட் ஏஜென்டுகள் கைப்பற்றப்போகிறார்கள் என்று வேடிக்கையாகப் பேசுகிறார்கள் அமெரிக்க மக்கள்.

Source link

Continue Reading

Trending