Connect with us

தமிழ்நாடு

மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்படலாம்: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் தொற்று துவங்கி தொடர்ந்து அதிகரித்து வரும் டெஸ்ட்கள், மருத்துவ வசதிகள் பற்றாக்குறை வரை இந்தியாவின் நிலைமையை உணர்ந்த மத்திய அரசு கொரோனாவுக்கு எதிரான எச்சரிக்கை நடவடிக்கைகளை வியாழக்கிழமை அதிகப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான இறப்பு விகிதம் நிலையானதாக இருக்கிறது என்றாலும் 69 மாவட்டங்களில் அதிகப்படியான சி.எஃப்.ஆர். Case Fatality Rate (CFR) பதிவாகியுள்ளது.

மகாராஷ்ட்ரா, தமிழகம், டெல்லி, குஜராத், மற்றும் உத்திர பிரதேசம் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு. தற்போது இருக்கும் நிலவரத்தை உணர்ந்த மத்திய அரசு, வருங்காலத்தில் இம்மாநிலங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் ஆகியவைக்கு பற்றாக்குறை ஏற்படும் என அறிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கேஸ்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை குறித்து ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பாஜகவுடனும், மத்திய அரசுடனும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஜூன் மூன்றாம் தேதியில் இருந்து ஐ.சி.யூ, படுக்கை வசதிகள், ஜூன் 12ல் இருந்து வெண்டிலேட்டர் வசதிகள் மற்றும் ஆக்ஸிஜனுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் ஜூன் 25ம் தேதியில் இருந்தும் பற்றாக்குறையாகும் என்று கணிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கேபினட் செயலாளர் ராஜீவ் கௌபா மாநில தலைமை செயலாளர்கள், மற்றும் சுகாதார செயலாளர்களுடன் நடத்திய வீடியோ கான்ஃப்ரென்ஸ் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் ஐ.சி.யூ படுக்கைகளுக்கு ஆகஸ்ட் 8ல் இருந்து பற்றாக்குறை ஏற்படும் என்றும், வெண்டிலேட்டர்களுக்கு ஜூலை 27ல் இருந்தே பற்றாக்குறை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஐ.சி.யூ படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர்களுக்கு ஜூலை 9 முதல் பற்றாக்குறை ஏற்படும் என்றும் ஜூலை 21ம் தேதியில் இருந்து ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஹரியானா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கும் இதே போன்று கணிப்புகள் அன்று வெளியிடப்பட்டது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான படுக்கை வசதிகளை முன் திட்டமிடல் மூலமாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அம்மாநிலங்களுக்கு வழியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதார அமைப்பை மேம்படுத்த ஒரு திட்டத்துடன் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குருகிராம், மும்பை, தானே, பல்கார், ஜல்கௌன், சென்னை மற்றும் கௌதம் புத் நகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இந்த கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற இதே நிலைமை நீடிக்கும் பட்சத்தில் இந்த மாவட்டங்களில் வருகின்ற ஒரு மாதத்தில் மருத்துவசேவை பற்றாக்குறை உருவாக வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றின் இறப்பு விகிதத்தில் சிறப்பு கவனம் செலுத்த இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. (நோய் எண்ணிக்கைகளின் இரட்டிப்பு விகிதம் 16.9 நாட்கள். ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு 14.1 இருந்தது) அதே போன்று இறப்பு விகிதமும் கணக்கில் கொள்ளப்பட்டது. நூறு நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் அதில் 2.9%-ஆக இறப்பு விகிதம் உள்ளது. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு அது 2.96 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் கொரோனா உறுதிப்படுத்தல் விகிதம் (confirmation rate) அதிகமாகியுள்ளதையும் உறுதி செய்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு 4.87%மாக இருந்த உறுதிப்படுத்துதல் விகிதம் தற்போது 5.7% ஆக உள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்துதல் விகிதம் 10% ஆக உயர்ந்துள்ளது (ஜூன் 9ம் தேதி நிலவரப்படி)

உறுதிப்படுத்துதல் விகித உயர்வு என்பது அதிகப்படியான நோய் பரவல் அல்லது குறைவான டெஸ்ட்கள் நடத்தப்பட்டதை குறிப்பிடுகிறது. தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, மற்றும் டெல்லியில் உறுதிப்படுத்துதல் விகிதம் என்பது 10% ஆக உள்ளது. மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பை மற்றும் தானே, தமிழகத்தின் சென்னை போன்ற மாவட்டங்களில் உறுதிப்படுத்துதல் விகிதமானது 20%-ஐ எட்டியுள்ளது. மேலும் பல்கார் (மகாராஷ்ட்ரா), மெத்ச்சல் – மல்கஜ்கிரி (தெலுங்கானா), ஹோஜாய் (அசாம்) போன்ற ஊரக பகுதிகளிலும் கொரோனா உறுதிப்படுத்தல் விகிதம் 20%-ஐ எட்டியுள்ளது என்று மத்திய அரசு இந்த ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளது.

13 மாநிலங்களில் இருக்கும் 69 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதமானது 5% வரை உள்ளது. அந்த 69 மாவட்டங்களில் 51 மாவட்டங்கள் மத்திய பிரதேசம்(21), உத்திர பிரதேசம் (11), மகாராஷ்ட்ரா(10), மற்றும் குஜராத் (9) மாநிலங்களை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா கேஸ்கள் மற்றும் இறப்பு விகிதங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தான் இந்தியாவின் மொத்த கொரோனா கேஸ்களில் 76%-த்தை பதிவு செய்துள்ளது.

82% இறப்புகள் மகாராஷ்ட்ரா, டெல்லி, மேற்கு வங்கம், குஜராத், மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 30 எபிசெண்டர் மாவட்டங்கள் குறித்தும் கேபினட் செயலாளர் பேசினார். இவைகள் தான் இந்தியாவில் ஆக்டிவாக இருக்கும் 72% கொரோனா கேஸ்களை கொண்டுள்ள இடங்கள் என்று குறிப்பிட்ட அவர் இந்த பகுதிகளுக்கு கூடுதலாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.

அதிகமான எபிசெண்டர்கள் நகர்புறங்களில் தான் இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 23 மாவட்டங்கள் டெல்லி, மகாராஷ்ட்ரா, தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இறப்பு விகிதத்தை குறைப்பது குறித்து தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது மத்திய அரசு. மேலும் இரண்டு சோதனைகளுக்கு இடையேயான இடைவெளி எந்தெந்த காரணங்களால் சவால் மிகுந்ததாக இருக்கிறது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் இரண்டு முக்கியமான விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முதலில் இந்த நோய் கிழக்கு நோக்கி பரவுதலும், புதிய மாவட்டங்களில் நோய் தொற்று ஏற்படுதலும் இரண்டாவது மே 18ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அதிகரிக்கும் நோய் தொற்றின் தீவிரம். கடந்த 3 வாரங்களில் 98 மாவட்டங்களில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாவட்டங்களில் இந்த நோய் தொற்று அதிகமாக உள்ளது. 53 மாவட்டங்கள் இந்த மாநிலங்களை சேர்ந்தவை தான். சத்தீஸ்கர், ஒடிஷா, மேற்கு வங்கத்தில் உள்ள 25 மாவட்டங்களுக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

கவனம் செலுத்தப்பட வேண்டிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் (400க்கும் அதிகமாக கொரோனா நோய் தொற்று இருக்கும் மாவட்டங்களில்) 50% நோய் தொற்றுகள் மே 18ம் தேதிக்கு பிறகு தான் ஏற்பட்டது. மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், தமிழ் நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருக்கும் மாவட்டங்களில் தான் இத்தகைய பாதிப்புகள் உருவானது. குருகிராம், உடுப்பி, யதிர், கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் 400க்கும் அதிகமான கொரோனா நோய் தொற்று மே 18ம் தேதிக்கு பிறகு தான் உருவானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயலாளரால் பரிந்துரைக்கப்பட்ட செயல் திட்டத்தில் கட்டுப்பாடு, சோதனை, தடமறிதல் மற்றும் சுகாதார அமைப்பு மேம்பாடு ஆகியவையும் அடங்கும். “அடுத்த இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் மருத்துவமனை திறனை உறுதி செய்ய வேண்டும். படுக்கை திறன் மற்றும் HR – உடன் கூடிய வசதிகளை (எ.கா. பல்ஸ் ஆக்ஸிமீட்டர்) உறுதிப்படுத்த வேண்டும்.

சுகாதார அமைப்பின் சுமையை குறைக்க நிறுவன தனிமைப்படுத்தல் (Institutional quarantine/isolation) அதிகரிக்க வேண்டும் என்றும் நிறுவன திறனை அதிகரிக்க வேண்டும். ஹோட்டல்கள் மற்றும் அரங்கங்களில் குவாரண்டைன் வசதிகளை அதிகரிக்க வேண்டும். இறப்பு தணிப்பு குறித்து குறிப்பிடும் போது “தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயலில் கண்காணிப்பு / சோதனைகளை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அதிகப்படுத்துதலின் மூலம் அதிக ஆபத்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இயலும் என்று கூறப்பட்டுள்ளது.

குறைவான இறப்பு விகிதத்தை உறுதி செய்வதற்கான சிகிச்சை முயற்சிகள், எடுத்துக்காட்டாக, நோயுற்ற / வயதான நோயாளிகளுக்கு முதல் உரிமை கொடுத்து மருத்துவமனையில் அனுமதிப்பது, அறிகுறிகளின் விரிவாக்கம் குறித்த சரியான நேரத்தில் பரிந்துரைகள், சிறப்பான மையங்கள் வழியாக மருத்துவ நடைமுறையை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

1 Comment

1 Comment

  1. Pingback: SBI ல் 3850 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அரசியல்

நடிகர் கருணாசுக்கு வன்னியர் சங்க மா.செ எச்சரிக்கை!

vaithi

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசம் தவறாக பயன்படுத்தப்பட்டது வன்னியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் கருணாஸ் சூரியாவிர்க்கு ஆதரவாகவும், வன்னியர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்க மாநில செயலாளர் அவரது முகநூல் பக்கத்தில் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு,

பதிலறிக்கை அல்ல
எச்சரிக்கை:
—–
லொடுக்குப்பாண்டி  கருணாஸ் எல்லாம் புத்தி சொல்ல வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் தள்ளப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  .

பாட்டாளி மக்கள் கட்சியை கண்டிப்பதற்கு கருணாஸ் போன்றவர்களுக்கு துளியளவும் அருகதை இல்லை.

ஒரு நாளைக்கு தன்னோட சாதி கட்சிக்காரங்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கு சரக்கு வாங்கி கொடுப்பதாக மேடையில் பேசி, தமிழ் சமூக இளைஞர்களை போதையின் பாதையில்  இட்டு செல்லும் நான்காம் தர அரசியல்வாதி நீ.மன்னார்குடி தயவில் எம்எல்ஏ ஆகி, அதற்கு நன்றி கடனாக கூவத்தூரில் கருணாஸ் செய்த கலைச் சேவைகளை தமிழக மக்களும் ஊடகங்களும் இவ்வுலகமும் அறிந்தவைதானே.எங்கள் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும், தன் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் குடிக்கக்கூடாது என்பதற்காக 40 ஆண்டுகாலமாக மதுவுக்கு எதிராக போராடி வருவதோடு,சட்ட போராட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 90,000 மதுக்கடைகளையும், தமிழ்நாட்டில் 3300 மதுக்கடைகளையும் மூடியது வரலாறு!!

இப்படியிருக்க சரக்கு வாங்கி கொடுப்பதை சாதனை போல பேசுவோரும், ஊற்றி கொடுத்து உற்சாகப்படுத்துவோரும் போதனை சொல்லி அறிக்கை விடுவதைப் பார்த்தால், தமிழக அரசியலின் நிலை வேடிக்கையாக உள்ளது.ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியினை நீக்கியும் பாமகவினர் வம்பிழுப்பதாக அறிக்கையில் கூறியிருக்கிறீர்கள். படக்குழுவினர் தவறை உணர்ந்து, வன்னியர்களது புனித சின்னமான அக்னி கலசத்தை கொலைகார எஸ்ஐ வீட்டு காட்சியிலிருந்து நீக்கியதாக இருந்தால், தவறு செய்தவர்கள் யார் மனதை புண்படுத்தினார்களோ அவர்களிடம் மன்னிப்பு கேட்பதும், காட்சிப்படுத்தியதன் காரணத்தை விளக்குவதும்தான் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்திருக்கும்.

இதனை குறிப்பிட்டுதான் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் 9 கேள்விகளை கேட்டு படத்தின் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு நாகரீகமான கடிதம் ஒன்று எழுதினார்கள்.அதற்கு தக்க பதில் அளித்திருக்க வேண்டிய சூர்யா, ஒரு கேள்விக்காவது உரிய விளக்கம் கொடுத்தாரா என்றால் இல்லவே இல்லை. அதை விடுத்து அவர்களுக்கு மட்டுமே ஏகோபித்த மக்களின் ஆதரவு இருப்பது போல எகத்தாளமாக பதில் தருவது என்ன ரகம்.செய்யாத குற்றத்திற்காக, சம்மந்தமில்லாத வன்னிய சமூகத்தை கொடூர கொலைகார சமூகமாக சித்தரித்த பழிகார நடிகன் சூர்யாவிற்கு இத்தனை ஆதரவு இருப்பதாக திரைக்கூத்தாடிகள் காட்டியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே இக்கொலைக்கு நீதி கிடைக்க ராசாக்கண்ணு குடும்பத்துக்கு ஆதரவாக அவ்வூரைச் சேர்ந்த வன்னிய சமூகம் தான் துணை நின்றதென்பது வரலாறு.அதை அறிந்துகொண்ட பிறகும் வரலாற்றை திரித்து ஜெய்பீம் படக் கும்பலால் பழி சுமத்தப்பட்டு மனம் நொந்து நிற்கும் மூன்று கோடி வன்னிய சொந்தங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பதை விரைவில் இந்த அடாவடி திரையுலக அறிக்கை கும்பல் உணரும்.அதை வன்னியர் சங்கம் உணர்த்தும். 

பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலியை 1 % கூட உணராதஇதுபோன்ற பலரின் வெற்று அறிக்கைகளை பலவற்றைப் பார்த்துதான்  40 ஆண்டுகாலம் இந்த இயக்கம் சமூகப்பணி ஆற்றி வருகிறது.லொடுக்குப் பாண்டியே இத்துடன் நிறுத்திக்கொள்!!இது உமக்கான பதிலறிக்கை மட்டுமல்ல.கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் கூச்சலிடும் கூத்தாடிகள் அனைவருக்குமானதுதான்..இது அறிக்கையல்ல.எச்சரிக்கை!!.

Continue Reading

தமிழ்நாடு

சங்ககிரியில் சாலை பாதுகாப்பு வாரவிழா: கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு- Dinamani

WhatsApp_Image_2021-01-20_at_1

சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு

 

32வது சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், தலைக்கவசம்  அணிவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 

32வது சாலை பாதுகாப்பு வார விழா 3வது நாளையொட்டி சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்க  வேண்டியும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் கார்களில் சீல்பெல்ட் அணிவதன் பாதுகாப்பு பற்றியும் கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கிக் கூறப்பட்டன. 

புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கே.சுப்ரமணியம் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என். சரவணபவன், வி.கோகிலா, ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். புதிய பேருந்து நிலையம் வழியாக சென்ற லாரிகள், பேருந்துகள், கார்களின் ஓட்டுநர்கள், பேருந்தில் பயணம் செய்தவர்களிடம் எமதர்மன் வேடமணிந்த நபர்கள் தலைவிதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். 

மேலும்  இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களிடம் எமதர்மன் வேடமணிந்த நபர் தலைகவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டினால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை விளக்கினர். தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு நீல நிற பந்துமுனை பேனாவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களிடம் வழங்கப்பட்டன.

 



Source link

Continue Reading

தமிழ்நாடு

சிவகங்கையில் பல கி.மீ., சென்று வாக்களிக்கும் கிராம மக்கள்: மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏ புகார் | Sivagangai: Final electoral list rolled out

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் பல கி.மீ., சென்று கிராம மக்கள் வாக்களிக்கும் நிலை உள்ளதால், அதை மாற்ற வேண்டுமென ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் எம்எல்ஏ நாகராஜன் புகார் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.

தேர்தல் பார்வையாளர் ஆப்ரஹாம், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், சுரேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன் பேசுகையில், ‘‘ மானாமதுரை தொகுதியில் சில கிராம மக்கள் வாக்களிக்க பல கி.மீ., வரை செல்ல வேண்டியுள்ளது. அவர்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்,’’ என்று கூறினார்.

தொடர்ந்து மற்ற அரசியல் கட்சியினர் பேசுகையில், ‘புதிய வாக்காளர்களுக்கு இதுவரை அடையாள அட்டை கிடைக்கவில்லை. மனு கொடுத்தும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் முகவரி மாறி, மாறி அச்சிட்டுள்ளனர்,’ என்று தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

புதிய வாக்காளர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முகவரி மாறியது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வர். இரண்டு கி.மீ.,க்கு அப்பால் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நவ.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதற்கு பிறகு புதிய வாக்காளர்களாக 38,286 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் இறந்தவர்கள், இரட்டை பதிவு என 14,482 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த முறை 80-வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தனி அடையாளம் தர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இறுதிப்பட்டியல் வெளியிட்டாலும் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடக்கும்.

மாவட்டத்தில் 1,348 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை 2-ஆக பிரிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளோம், என்று கூறினார்.



Source link

Continue Reading

Trending