சமையலில் அதிகமாக பெருங்காயம் சேர்த்தால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை வந்துவிடும் என ஒரு கட்டுக்கதை உலவி வருகிறது. அதை அம்மாக்களோ அல்லது பெரியவர்களோ சொல்லக் கேட்டு இளைய தலைமுறையும் அதை அப்படியே நம்பிவிடுவார்கள். இதனால் பாவம் அந்த பெருங்காயத்திற்கான மதிப்பு , மருத்துவ குணங்கள் எல்லாமே கிடைக்காமல் போய்விடும். சரி உண்மையில் பெருங்காயம் ஆண்மைத் தன்மையைக் குறைத்துவிடுமா..?

நிச்சயமாக இல்லை. உண்மையில் பெருங்காயம் உடலுறவில் சிறப்பாக செயல்படவும், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கும் நல்ல மருந்து. இதை ஆயுர்வேதத்திலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சிட்டிகைப் பெருங்காயத்தை உணவில் சேர்த்துக்கொண்டாலும் ஆண்களின் பாலியல் குறைபாடு பிரச்னைகள் தீருமாம். இது முன்னோர்கள் காலத்திலிருந்தே பின்பற்றப்படும் மூலிகை மருத்துவமும் கூட.

அதாவது ஆண்கள் ஆண்குறி விறைப்பு இல்லாமையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியவில்லை என்றாலும் தொடர்ந்து பெருங்காயத்தை உணவில் சேர்த்து வர இந்த பிரச்னை குணமாகும் என மருத்துவர் ஹெச். கே பக்ரூ தன்னுடைய மூலிகை மருத்துவம் புத்தகத்தில் கூறியுள்ளார்.

இந்த பெருங்காயமானது ஆண்குறியில் உள்ள லிபிடோ சுரத்தல் குறைபாட்டை சரி செய்து சீரான இரத்த ஓட்டத்தைப் பாய்ச்சும். இதனால் விறைப்புப் பிரச்னை தீரும் என்கிறார்.

அதுமட்டுமன்றி தினசரி 6 செண்டிகிராம் வீதம் உணவில் சேர்த்து வந்தால் 40 நாட்களுக்குள் பலன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இது வையகராவின் மாற்று மூலிகை மருந்து என்றும் கூறுகிறார்.

உலர்ந்த அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இந்த நீண்ட நாள் பிரச்சனையை சரியாகிடுமா.!!

பெருங்காயம் இந்த விஷயத்திற்கு மட்டுமல்ல வயிற்று பிரச்னை , ஆஸ்துமா, நோய் அழற்சி , இறுமல் போன்ற பிரச்னைகளுக்கும் உதவும். அதுமட்டுமன்றி இரத்த அழுத்தம் , சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல நண்பன்.

பெண்கள் மாதவிடாய் நாட்களில் வயிறு இறுக்கிப் பிடித்தல், அடி வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் மோரில் பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகைக் கலந்து வெந்தையமும் சேர்த்துக் குடித்தால் குணமாகும்.

ஆக…யாரோ பெருங்காயம் பிடிக்காமல் பார்த்த வேலைதான் இது. எனவே உணவில் பெருங்காயம் சேர்ப்பதில் தயக்கம் வேண்டாம். அதற்காக அள்ளி கொட்டாதீர்கள். சிட்டிகைக் கணக்கில் சேர்த்தாலே மணமாக இருக்கும். மருத்துவ குணமாகவும் இருக்கும்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link