Connect with us

அரசியல்

புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்! – மரு.அன்புமணி இராமதாசு!

8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை தேவையற்றவை: புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்!

இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான ஏற்பாடு என்று கூறி, புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு சில திட்டங்கள் வரவேற்கக்கூடியவையாக இருந்தாலும் கூட, பெரும்பாலான திட்டங்கள் மொழித்திணிப்பையும், ஏழை அடித்தட்டு மக்களிடமிருந்து பள்ளிக்கல்வியை பறிப்பதையும் தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்தக் கொள்கை ஆபத்தானது.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையில், 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைக் கட்டுப்படுத்தவும் தான் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய அம்சமே எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது தான். ஆனால், கடந்த ஆண்டு சட்டத்திருத்தம் மூலம் 8-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது அதைவிட மோசமாக 3, 5, 8 ஆகிய 3 வகுப்புகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், முதல் வகுப்பில் பள்ளியில் சேரும் குழந்தைகள் அடுத்த மூன்றாவது ஆண்டிலேயே பள்ளிப்படிப்பை கைவிடும் நிலை உருவாகி விடும். இந்தியாவின் ஊரக மக்கள், தங்களின் பிள்ளைகளை சில கட்டாயங்களின் அடிப்படையில் தான் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அவர்கள் ஏதேனும் வகுப்பில் தோல்வியடைந்தால், உடனடியாக படிப்பை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 3&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என்பது ஊரக மாணவர்களின் பள்ளிக்கல்விக்கு முடிவு கட்டுவதாகவே அமையும்.

5 மற்றும் 8&ஆம் வகுப்புக்கே பொதுத்தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடாகும். கல்வி முன்னேற்றம் என்ற பெயரில் 3&ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது கொடூரமானதாகும். மத்திய அரசு பள்ளிகளில் முதல் இரு வகுப்புகளுக்கு தேர்வுகளே நடத்தப்படுவதில்லை. அத்தகைய சூழலில் குழந்தைகள் எழுதும் முதல் தேர்வு என்பதே பொதுத்தேர்வு என்பது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். 8&ஆம் வகுப்பு வரை எந்த வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தக்கூடாது.

மாணவர்கள் புதிய மொழியை கற்றுக்கொள்ள வசதியாக மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப் படும் என்ற அறிவிப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மூன்றாவது மொழியை விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறினாலும் கூட, அது தொடர்பான மத்திய அரசின் விதிகளில் சமஸ்கிருதத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருதத் திணிப்பாகவே அமையும். பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் திறமையை மட்டும் மதிப்பிடாமல், புலமையும் சேர்த்து மதிப்பிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமைகள் தேர்வு மற்றும் அதில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால், புலமை எவ்வாறு மதிப்பிடப்படும் என்பது தெரியவில்லை. இது முறைகேடுகளுக்குத் தான் வழிவகுக்கும்.

கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முறைக்கு 15 ஆண்டுகளில் முடிவு கட்டப்படும் என்றும், அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை தன்னாட்சி வழங்குவது நல்லது. ஆனால், தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் இணைப்பு பெற்று அவற்றின் மேற்பார்வையில் செயல்படுவது தான் சரியானதாக இருக்கும். தனியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அளித்தால் விதிமீறல்களும், முறைகேடுகளும் அதிகரிக்கும்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி ஏற்கனவே கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நுழைவுத் தேர்வு என்பது அவர்களை உயர்கல்வியில் நுழையவிடாத தேர்வாக அமைந்துவிடும். இத்திட்டத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி வெளியிடப் பட்டு கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கோரப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சி ஏராளமான புதிய திட்டங்களை ஆலோசனையாக வழங்கியது. அவை ஏற்கப் பட்டிருந்தால் மாணவர்கள் நலனை பாதிக்கும் மேற்கண்ட திட்டங்கள் புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டு இருக்காது. ஆனால், மக்களின் யோசனைகள் சேர்க்கப்படாததில் இருந்தே கருத்துக் கேட்பு என்பது கண்துடைப்பு என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது. மேற்கண்ட திட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழி தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்; வாய்ப்பிருந்தால் அதை எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது படிப்படியாக பள்ளிக்கல்வி முழுமைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி நடுநிலை வகுப்புகளிலேயே தொழிற்கல்வி அறிமுகம் செய்யப்படுவதும் வரவேற்கத்தக்கதே.

பள்ளிக்கல்வியை 11 ஆண்டுகளாக குறைந்து, பட்டப்படிப்பை 4 ஆண்டுகளாக அதிகரிப்பது, பட்டப் படிப்பிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற அனுமதிப்பது, எம்.பில் படிப்பு கைவிடப் படுவது ஆகியவை வரவேற்கப்பட வேண்டியவையாகும். உயர்கல்விக்கான ஒழுங்குமுறைகள் பெரும்பாலும் தனியாருக்கு சாதகமானவையாக இருப்பதால், உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அரசு விலகிக் கொள்ளுமோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. இந்த ஐயத்தை மத்திய அரசு போக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கட்டண விகிதத்தை நிர்ணயிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆணையம் தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்; அதேநேரத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டணத்தை உயர்த்த புதிய கட்டண நிர்ணய ஆணையம் வழி செய்து விடக்கூடாது.

கல்விக்காக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% செலவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியின் அளவை இரு மடங்குக்கும் கூடுதலாக உயர்த்த வேண்டும். இதை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல அம்சங்கள் இருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களும் ஏராளமாக உள்ளன. எனவே, பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை நீக்கி, புதிய கல்வியைக் கொள்கையில் மத்திய அரசு தேவையான திருத்தங்களைச் செய்து வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, 1964-ஆம் ஆண்டின் கோத்தாரி ஆணைய அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான அம்சங்களை புதிய கொள்கையில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல்

நடிகர் கருணாசுக்கு வன்னியர் சங்க மா.செ எச்சரிக்கை!

vaithi

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசம் தவறாக பயன்படுத்தப்பட்டது வன்னியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் கருணாஸ் சூரியாவிர்க்கு ஆதரவாகவும், வன்னியர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்க மாநில செயலாளர் அவரது முகநூல் பக்கத்தில் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு,

பதிலறிக்கை அல்ல
எச்சரிக்கை:
—–
லொடுக்குப்பாண்டி  கருணாஸ் எல்லாம் புத்தி சொல்ல வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் தள்ளப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  .

பாட்டாளி மக்கள் கட்சியை கண்டிப்பதற்கு கருணாஸ் போன்றவர்களுக்கு துளியளவும் அருகதை இல்லை.

ஒரு நாளைக்கு தன்னோட சாதி கட்சிக்காரங்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கு சரக்கு வாங்கி கொடுப்பதாக மேடையில் பேசி, தமிழ் சமூக இளைஞர்களை போதையின் பாதையில்  இட்டு செல்லும் நான்காம் தர அரசியல்வாதி நீ.மன்னார்குடி தயவில் எம்எல்ஏ ஆகி, அதற்கு நன்றி கடனாக கூவத்தூரில் கருணாஸ் செய்த கலைச் சேவைகளை தமிழக மக்களும் ஊடகங்களும் இவ்வுலகமும் அறிந்தவைதானே.எங்கள் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும், தன் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் குடிக்கக்கூடாது என்பதற்காக 40 ஆண்டுகாலமாக மதுவுக்கு எதிராக போராடி வருவதோடு,சட்ட போராட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 90,000 மதுக்கடைகளையும், தமிழ்நாட்டில் 3300 மதுக்கடைகளையும் மூடியது வரலாறு!!

இப்படியிருக்க சரக்கு வாங்கி கொடுப்பதை சாதனை போல பேசுவோரும், ஊற்றி கொடுத்து உற்சாகப்படுத்துவோரும் போதனை சொல்லி அறிக்கை விடுவதைப் பார்த்தால், தமிழக அரசியலின் நிலை வேடிக்கையாக உள்ளது.ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியினை நீக்கியும் பாமகவினர் வம்பிழுப்பதாக அறிக்கையில் கூறியிருக்கிறீர்கள். படக்குழுவினர் தவறை உணர்ந்து, வன்னியர்களது புனித சின்னமான அக்னி கலசத்தை கொலைகார எஸ்ஐ வீட்டு காட்சியிலிருந்து நீக்கியதாக இருந்தால், தவறு செய்தவர்கள் யார் மனதை புண்படுத்தினார்களோ அவர்களிடம் மன்னிப்பு கேட்பதும், காட்சிப்படுத்தியதன் காரணத்தை விளக்குவதும்தான் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்திருக்கும்.

இதனை குறிப்பிட்டுதான் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் 9 கேள்விகளை கேட்டு படத்தின் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு நாகரீகமான கடிதம் ஒன்று எழுதினார்கள்.அதற்கு தக்க பதில் அளித்திருக்க வேண்டிய சூர்யா, ஒரு கேள்விக்காவது உரிய விளக்கம் கொடுத்தாரா என்றால் இல்லவே இல்லை. அதை விடுத்து அவர்களுக்கு மட்டுமே ஏகோபித்த மக்களின் ஆதரவு இருப்பது போல எகத்தாளமாக பதில் தருவது என்ன ரகம்.செய்யாத குற்றத்திற்காக, சம்மந்தமில்லாத வன்னிய சமூகத்தை கொடூர கொலைகார சமூகமாக சித்தரித்த பழிகார நடிகன் சூர்யாவிற்கு இத்தனை ஆதரவு இருப்பதாக திரைக்கூத்தாடிகள் காட்டியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே இக்கொலைக்கு நீதி கிடைக்க ராசாக்கண்ணு குடும்பத்துக்கு ஆதரவாக அவ்வூரைச் சேர்ந்த வன்னிய சமூகம் தான் துணை நின்றதென்பது வரலாறு.அதை அறிந்துகொண்ட பிறகும் வரலாற்றை திரித்து ஜெய்பீம் படக் கும்பலால் பழி சுமத்தப்பட்டு மனம் நொந்து நிற்கும் மூன்று கோடி வன்னிய சொந்தங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பதை விரைவில் இந்த அடாவடி திரையுலக அறிக்கை கும்பல் உணரும்.அதை வன்னியர் சங்கம் உணர்த்தும். 

பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலியை 1 % கூட உணராதஇதுபோன்ற பலரின் வெற்று அறிக்கைகளை பலவற்றைப் பார்த்துதான்  40 ஆண்டுகாலம் இந்த இயக்கம் சமூகப்பணி ஆற்றி வருகிறது.லொடுக்குப் பாண்டியே இத்துடன் நிறுத்திக்கொள்!!இது உமக்கான பதிலறிக்கை மட்டுமல்ல.கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் கூச்சலிடும் கூத்தாடிகள் அனைவருக்குமானதுதான்..இது அறிக்கையல்ல.எச்சரிக்கை!!.

Continue Reading

அரசியல்

சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு சிகிச்சை – பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தகவல் | Bengaluru hospital report about Sasikala health | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Bengaluru-hospital-report-about-Sasikala-health

பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில் சிறையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. உடனடியாக சசிகலா இருந்த அறைக்கு விரைந்த சிறைத்துறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு மூச்சுத் திணறலுடன், காய்ச்சலும் ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க சிறைத்துறை மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு ரத்தக்கொதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. காய்ச்சல், மூச்சுத் திணறல் குறைந்திருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் தகவல்களை பகிர்ந்து கொண்ட அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஒரு வாரமாகவே சசிகலாவுக்கு வைரஸ் காய்ச்சலுக்கு சிறையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

image

இதுகுறித்து சசிகலாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் கூறுகையில், மூச்சுத்திணறல் உள்ளதால் ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிறது. ஆனால் காய்ச்சல் தற்போது இல்லை. ஆக்ஸிஜன் அளவு 79% இருந்ததால் தற்போது ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது என சிகிச்சையளித்து தெரிவித்திருக்கிறார். சர்க்கரை நோய், தைராய்டு, இருமல், காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் எனவும், சிகிச்சைக்குப்பின் அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், ரேபிட் பரிசோதனையில் நெகடிவ் என வந்தாலும், ஆர்டி- பிசிஆர் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

Source link

Continue Reading

அரசியல்

ஜோ பைடனின் மனைவி பெறப்போகும் வரலாற்றுப் பெருமைகள்! | Interesting facts about first woman of America Jill Biden | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Interesting-facts-about-first-woman-of-America-Jill-Biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் வரலாற்று பெருமைகளைப் பெறும் அமெரிக்காவின் முதன் பெண்மணி ஆவார்.

மனைவிமார்கள் தங்களது கணவர்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பார்கள். ஜில் பைடனும் அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர்தான். சில தருணங்களில் சீக்ரெட் ஏஜெண்டைப் போல, அசம்பாவிதங்களில் இருந்து ஜோ பைடனைக் காப்பாற்றியவர் ஜில் பைடன். அமெரிக்க மக்கள் இதுபோன்ற காட்சிகளை பலமுறை கண்டிருக்கிறார்கள்.

ஜில் பைடன், ஜோ பைடனின் இரண்டாவது மனைவி. தனது காதல் மனைவியும் மகளும் விபத்தில் மரணமடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு 1978-ஆம் ஆண்டில் ஜில் பைடனை ஜோ பைடன் திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தவர் ஜில் என்று ஜோ பைடன் பலமுறை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். தாயை இழந்த இரு மகன்களையும் அன்புகாட்டி வளர்த்த விதம் குறித்தும் ஜோ பைடன் உணர்ச்சி பொங்கக் கூறியிருக்கிறார்.

image

ஜில் பைடனின் இயற்பெயர் ஜில் டிரேசி ஜேக்கப்ஸ். இத்தாலிய-அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இத்தாலிய பாரம்பரியத்தில் இருந்து முதல் பெண்மணியாகப் போகும் முதல் நபர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கப் போகிறது. ஜில் பைடன் ஒரு கல்லூரிப் பேராசிரியரும்கூட. வெள்ளை மாளிகையில் குடியேறிய பிறகும் பேராசிரியர் பணியைத் தொடரப் போவதாக அறிவித்திருக்கிறார். அப்படிச் செய்தால், அமெரிக்க வரலாற்றிலேயே வேலை செய்யும் முதலாவது முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையும், ஜில் பைடனுக்குச் சொந்தமாகும். இவை மட்டுமல்ல, ஆங்கிலம், வாசிப்பு ஆகிய இரு துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்கும் ஜில் பைடன், முதல் பெண்மணிகளிலேயே அதிகம் படித்தவர் என்ற பெருமையையும் பெறப் போகிறார்.

image

குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஜோ பைடனின் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஜில் பைடன் இருந்திருக்கிறார். 1988-ஆம் ஆண்டு முதல் அதிபர் பதவியை நோக்கிய ஜோ பைடனின் பயணத்தில் ஜில் பைடனின் பங்கு கணிசமானது. அதிபர் தேர்தல் பரப்புரைகளிலும் களைப்பில்லாமல் பணியாற்றியிருக்கிறார் ஜில் பைடன். தற்போது அமெரிக்க அதிபராகிவிட்டார் ஜோ பைடன். இதுவரை ஜில் பைடன் செய்த பாதுகாப்புப் பணியை உண்மையான சீக்ரெட் ஏஜென்டுகள் கைப்பற்றப்போகிறார்கள் என்று வேடிக்கையாகப் பேசுகிறார்கள் அமெரிக்க மக்கள்.

Source link

Continue Reading

Trending