புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் அல்லு அர்ஜூன். ராஷ்மிகா மந்தாவுடன் நடித்த இந்தப் படம் இந்திய அளவில் வசூலில் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை வாரிக் குவித்த அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் தொடங்கிவிட்டன. முதல் பாகத்தில் நடித்த பகத்பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் அடுத்தடுத்து கமிட்டான படங்கள் காரணமாக புஷ்பா 2 படத்தில் நடிப்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக வேறு ஸ்டார் நடிகர் மற்றும் நடிகையை களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

மேலும் படிக்க | சீதா ராமம் படத்தை அனைவரும் பாருங்கள் – வெங்கையா நாயுடு புகழாரம்

முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் தேதி பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. ஆனால், 2 ஆம் பாகத்தில் அவர் கட்டாயம் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் படக்குழு இது தொடர்பாக அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுவரை வெளியான தகவலின்படி, விஜய் சேதுபதி கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜூனும் புஷ்பா 2 படத்திற்காக அண்மையில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்நிலையில், அல்லு அர்ஜூன் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

குட்கா உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அண்மையில் அல்லு அர்ஜூனை அணுகியுள்ளது. தங்களின் பிராண்டை விளம்பரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிறுவனம், விளம்பரத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால், அதனை நிராகரித்திருக்கிறார் அல்லு அர்ஜூன். இந்த தகவல் இப்போது வெளியாகியிருக்கும் நிலையில், அல்லு அர்ஜூனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

மேலும் படிக்க | பா.இரஞ்சித்தின் புதிய படம் – நாளை வெளியாகிறது ட்ரெய்லர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJSource link