சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 67 படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். மேலும், தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று தளபதி 67 பூஜை வீடியோ வெளியான நிலையில், தற்போது சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாம்.
தளபதி 67 அப்டேட் ட்ரீட்
கோலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தளபதி 67 படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. மாஸ்டர் படத்தைத் தொடந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் தளபதி 67ல் நடிக்கின்றனர்.

Read This: அந்த மோசமான நாட்களை என் வாழ்வில் மறக்கவே முடியாது – சமந்தா!
ஓடிடி ரைட்ஸ் அப்டேட்
நேற்று மாலை தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இதில், விஜய், லோகேஷ், அர்ஜுன், த்ரிஷா, சாண்டி மாஸ்டர் ஆகியோருடன் நடிகர் ஜார்ஜ் மரியனும் கலந்துகொண்டார். லோகேஷின் கைதி படத்தில் முக்கியமான கேரக்டரில் ஜார்ஜ் மரியன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தளபதி 67 படத்திலும் அவர் கமிட் ஆகியுள்ளதால், இது லோகேஷ் யுனிவர்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தளபதி 67 ஓடிடி ரைட்ஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நெட்பிளிக்ஸ், சன் டிவி
அதன்படி தளபதி 67 ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டுடும் என்ற பிஜிஎம்முடன், ஒரு கேங் தளபதி 67ல் இணைந்துள்ளது. அது தான் நெட்பிளிக்ஸ் என படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் தளபதி 67 தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகும். முன்னதாக இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்ற கேப்ஷனுடன் இந்த அறிவிப்பு வெளியாகிருந்தது.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்
பல மாதங்களாக தளபதி 67 அப்டேட்டுக்காக காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்டு சப்ரைஸ் கொடுத்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். சாட்டிலைட் ரைட்ஸ், ஓடிடி உரிமை இரண்டுமே சன் டிவி, நெடிபிளிக்ஸிடம் சென்றதால், ப்ரீ ரிலீஸ் பிசினஸில் மாஸ் காட்டியுள்ளது தளபதி 67. அதன்படி சாட்டிலைட் உரிமை, ஓடிடி ரைட்ஸ் இரண்டும் சேர்த்து 150 கோடி ரூபாய்க்கும் மேல் பிசினஸ் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் தளபதி 67 படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
[…] […]