மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து 8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பற்றி பார்ப்போம்.
8வது சம்பள கமிஷன்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் அதிகரிப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும். இதனை அரசு ஊழியர்கள் சமாளிப்பதற்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் ஏற்படுகிறது. இந்த சம்பள உயர்வானது சம்பள கமிஷன் வழங்கும் பரிந்துரைகளின்படி வழங்கப்படும். ஆனால் இந்த பரிந்துரைகள் 2 ஆண்டுகளுக்கு பிறகு அமல்படுத்தப்படும். இதனை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு கடைசியாக 7வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது.

அதன்படி 2016ம் ஆண்டு முதல் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 8ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பாக அரசிற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்காக 8வது சம்பள கமிஷன் அமைக்க தற்போது எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் 8வது ஊதியக்குழு அமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து 2024ம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சக அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2026ம் ஆண்டில் 8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்படும். மேலும் 8ஆவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.