5 கெட்அப்பில் நடிக்கிறார் சந்தானம்

8/20/2022 1:51:18 AM

சென்னை: புதிய படத்தில் 5 கெட்அப்புகளில் சந்தானம் நடிக்க உள்ளார். காமெடியனாக இருந்த சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து அவர் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். எந்த படத்திலும் காமெடி கேரக்டரில் நடிக்கவில்லை. இனி அதுபோல் நடிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார். கடைசியாக குலு குலு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் துப்பறியும் நிபுணராக சந்தானம் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கோவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் சந்தானம் 5 கெட்அப்புகளில் நடிக்க உள்ளார். படத்தின் கதைக்காக ஐந்து வெவ்வேறு கெட்அப்புகளில் அவர் வந்தாலும், இதில் 5 வேடம் கிடையாதாம். ஒரே வேடத்தில்தான் நடிக்கிறார். இது காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேன்டஸி படமாக உருவாக உள்ளது. இதில் நடிக்கும் ஹீரோயின், மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் ஆகியோருக்கான தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

Source link