காந்திநகர்: வரும் 2047 ம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவேன் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்
![]() |
குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.கட்ச் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 2001 ம் ஆண்டு இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது மாவட்டத்தை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்வேன் என உறுதி அளித்தேன் .தற்போது 2022-ல் எப்படி உள்ளது என்பதை பாருங்கள்.
கட்ச் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 45 புதிய கல்லூரிகள் ஆயிரம் எண்ணிக்கையில் பள்ளிகள் ,250 மருத்துவமனைகள், ஆயிரம் எண்ணிக்கையில் தடுப்புஅணைகள், பூகம்பத்தை எதிர்கொள்ளும் வகையிலானமருத்துவமனை அமைந்துள்ளது. அதே போல் வரும் 2047 ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். அதை நிச்சயம் செய்வேன் என்று கூறினார்.
![]() |
முன்னதாக நிலநடுக்கத்தால் பலியோனோருக்கான அமைக்கப்பட்ட ஸ்மிருதி வான் மற்றும் வீர் பாலக் ஸ்மார்க் ஆகியவற்றை நாட்டுக்காக அர்ப்பணித்தார். இந்த நினைவுச்சின்னங்கள் ஜப்பானின் ஹிரோஷிமா வை போன்று கட்ச் பகுதியையும் உலக வரைபடத்தில் சேர்க்கும் என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் பேரிடர் சட்டத்தை அமல் படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமை குஜராத்திற்கு உண்டு.இதனை பின்பற்றியே மற்ற மாநிலங்களும் இது போன்ற சட்டத்தை இயற்றின என கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement