புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை, 2.9 லட்சம் வாக்காளர்கள், தங்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை உடன் இணைத்துள்ளனர்.நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரிசெய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.

ஆதார் இணைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் இப்பணி கடந்த 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. மொத்தமுள்ள 10 லட்சத்து 10 ஆயிரத்து 963 வாக்காளர்களில் இதுவரை 2.9 லட்சம் பேர், கடந்த 28 நாட்களுக்குள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையு டன் இணைத்து, அசத்தியுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியைத் தேர்தல் ஆணை யம் தொடங்கியுள்ள நிலை யில், எளிதாக வீட்டில் இருந் தபடியே இணைக்கலாம்.

நேரடியாக இணைக்க…

தேர்தல் ஆணையத்தின் ‘பூத் லெவல்’ அதிகாரிகள் வீடு வீடாக சென்று, ‘பார்ம் -6பி’ படிவத்தை விநியோகித்து வருகின்றனர்.அந்த விண்ணப்பத்தை பெறும் வாக்காளர், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, ஆதார் எண்ணை குறிப்பிட்டு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டையுடன் எளிதாக இணைக்கப்பட்டு விடும்.இது தவிர இணைப்புக்காக, ‘பூத் லெவல்’ அதிகாரியாக உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மூலமாக, வாக்காளர்களிடம் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இணையதளம் வாயிலாக

ஆன் – லைன் மூலம் இணைக்க, வாக்காளர்கள் https://www.nvsp.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை அணுக வேண்டும். வாக்காளரின் மின் அஞ்சல், வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது, மொபைல் போன் எண் ஆகியவற்றின் மூலம் ‘லாகின்’ செய்யலாம்.மாநிலம், மாவட்டம், தாலுகா விபரம், பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.அதன்பின் ‘சேர்ச்’ பட்டனை அழுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தினால், வாக்காளர் பதிவு செய்த விவரங்களும் அரசின் பதிவேட்டில் இருக்கும் விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பது தெரியவரும்.அதன்பின் கணினியின் இடதுபக்க திரையில் ‘பீட் ஆதார் நம்பர்’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். திரையில் வரும் பகுதியில் ஆதார் எண், ஆதார் கார்டு பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் நம்பர், மின் அஞ்சல் முகவரி ஆகிய வற்றை பதிவு செய்ய வேண்டும்.அனைத்து விவரங்களையும் சரிபார்த்தபின் ‘சப்மிட்’ செய்யலாம். பதிவு செய்த விவரங்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் திரையில் வரும். அதன்பின், ஆதார் எண் இணைக்கப்படும்.

பிளே ஸ்டோர் செயலி

வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர், தனது மொபைல் போனில் ‘வோட்டர் ஹெல்ப் லைன்’ செயலியை ‘பிளே ஸ்டோர்’ல் இருந்து பதி விறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த ‘செயலி’ யை திறந்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தொடர வேண்டும்.இந்த செயலியில் ‘வோட்டர் ரெஜிஸ்ட்ரேஷன்’ என்பதை கிளிக் செய்து, ‘எலக்டோரல் ஆதன்டிகேஷன் பார்ம் 6பி’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து வாக்காளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள் ளிட்டு ஓ.டி.பி., பெறலாம்.அதன்பின்பு போன் திரையில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றி ஆதார் எண், மொபைல் எண், விண்ணப்பிக்கும் இடம் ஆகியவற்றை உள்ளிடவும்.அனைத்து விவரங்களையும் நன்றாக சரி பார்த்து, இறுதி சமர்ப்பிப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின்பு ஒரு ‘ரெபரன்ஸ் நம்பர்’ கிடைக்கும்.அவ்வளவு தான், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம்.

கட்டாயமில்லை

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை. என்றாலும், வாக்காளர்கள் தாமாக முன்வந்து இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதன் மூலம், போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு, துல்லியமான வாக்காளர் பட்டியல் தயாரிக்க முடியும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link