வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி

வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி

மத்திய வெளிநாட்டு வர்த்தகப் பொதுத்துறை (DGFT) இந்தியாவில் வெங்காய விலை குறைந்துள்ளதன் வாயிலாகத் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் இருந்து இனி அனைத்து வகையான வெங்காய வகைகளை எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஜனவரி 1ஆம் முதல் அனுமதி அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தது.

மொத்த விலை சந்தை

மொத்த விலை சந்தை

இதன் வாயலாக அடுத்த இரண்டு நாடுகள் நாசிக் லசால்கவுன் மொத்த விற்பனை சந்தையில் ஒரு குவின்டால் வெங்காயம் 1,951 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெறும் இரண்டு நாட்களில் இதன் விலை சுமார் 2,500 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

தடாலடி உயர்வு

தடாலடி உயர்வு

செவ்வாய்க்கிழமை இதன் அளவு 2,400 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் படி கடந்த 2 நாட்களில் வெங்காயத்தின் விலை சுமார் 28 சதவீதம் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

ரீடைல் சந்தை விலை

ரீடைல் சந்தை விலை

மொத்த விலை சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு ரீடைல் சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை முதல் ஒரு கிலோ வெங்காயம் 35 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை 50 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதிக்குத் தடை

ஏற்றுமதிக்குத் தடை

செப்டம்பர் மாதம் இந்திய ரீடைல் சந்தையில் வெங்காயத்தின் விலை 100 ரூபாயைக் கடந்த நிலையில் மத்திய அரசு விலையைக் கட்டுப்படுத்த ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. தற்போது விலை அதிகளவில் குறைந்ததைத் தொடர்ந்து தற்போது ஏற்றுமதிக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

Source link