ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா பிரீமியம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.75,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே சந்தையில் உள்ள டிஎல்எக்ஸ் மாடலை விட ரூ.1,000, ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ.3,000 அதிகம். அழகுக்காக மேம்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள்தான் இதற்கு காரணம். சக்கரங்கள், லோகோ உள்ளிட்ட இடங்களில் தங்க நிற பூச்சு இடம்பெற்றுள்ளது.ஸ்கூட்டரின் உட்புறம் பிரவுன் நிறத்திலும், வெளிப்புறத்தில் நீலம், பச்சை மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இன்ஜினில் மாற்றம் இல்லை. இதற்கு முந்தைய வேரியண்ட்களில் உள்ள 109 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான் இதிலும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.68 பிஎச்பி பவரையும் 8.84 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Source link