ஹூண்டாய் நிறுவனம் என் வரிசை கார்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது.  கடந்த ஆண்டு ஐ20 என்லைன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு, புதிய வெனு என் லைன் என்ற காரை இந்தியச்சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காம்பாக்ட் எஸ்யுவி அடுத்த மாதம் 6ம் தேதி சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முற்றிலும் புதிய கருப்பு நிற கேபினில் ஆங்காங்கு சிவப்பு நிறமும் இடம்பெற்றுள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது. இதில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கும். டேஷ்போர்டில் மாற்றங்கள் இருக்காது என இந்த நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

Source link