ஹூண்டாய் நிறுவனம், டூசான் என்ற எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், டீசல் இன்ஜின் மாடல்கள் உள்ளன. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 156 எச்பி பவரையும் 192 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. டீசல் இன்ஜின் 186 எச்பி பவரையும், 416 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. ஸ்நோ, மட் மற்றும் சாண்ட் என்ற மூன்று வகையான டிரைவிங் மோட்கள் உள்ளன. உட்புற வடிவமைப்பில் சுவிட்சுகள், ‘டச் சென்சார்’ கட்டுப்பாடுகளாக மாற்றப்பட்டுள்ளன. 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. பிளாட்டினம், சிக்னேச்சர் என்ற வேரியன்ட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள், சிக்னேச்சர் டீசல் 4 வீல் டிரைவ் என 5 வேரியன்ட்கள் இடம்பெற்றுள்ளன. பிளாட்டினம் பெட்ரோல் துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.27.7 லட்சம் எனவும், டீசல் ரூ.30.2 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சிக்னேச்சர் பெட்ரோல் சுமார் ரூ.30.17 லட்சம், டீசல் ரூ.32.87 லட்சம், சிக்னேச்சர் டீசல் 4 வீல் டிரைவ் ரூ.34.39 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source link