Connect with us

ஆன்மிகம்

ஹஜ் பயணம் செய்ய ஜுலை 29 முதல் அனுமதி! – சவுதி அரசு

சவுதி அரேபியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்து இருக்கிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,22,936 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சவுதி குடிமக்களையும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் ஹஜ் பயணம் செய்ய ஜூலை 29 ஆம் தேதி முதல் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்மிகம்

எமதருமனுக்கு சந்நிதி; படிக்கட்டுகளாக நவக்கிரகங்கள்!  – திருப்பைஞ்ஞீலி திருத்தல அதிசயம் | yaman- tirupaineeli

திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்தால் கல்யாண பாக்கியம் கைகூடும். நீண்ட ஆயுளுடன் வாழலாம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும்! இங்கே எமனுக்கு சந்நிதி உள்ளது. நவக்கிரகங்கள் ஒன்பது படிக்கட்டுகளாக அமைந்திருக்கின்றன.

திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். ஞீலி என்றால் கல்வாழை என்று அர்த்தம். இது ஒருவகை வாழை. ஞீலிவனமாக வாழைத் தோப்பாக இருந்த இந்தத் தலத்தில் சிவனார் வெளிப்பட்டதால், ஞீலிவனநாதர் என்று பெயர் அமைந்தது. கோயிலின் ஸ்தல விருட்சம் வாழைதான். அம்பாளின் திருநாமம் ஸ்ரீவிசாலாட்சி அம்பாள்.

திருமண பரிகாரத் திருத்தலம் இது. சப்த கன்னியரே கல்வாழையாக இருக்கின்றனர் என்பதாக ஐதீகம். கோயிலுக்கு கோபுரமில்லை. பாதியில் கட்டப்பட்ட நிலையிலேயே மொட்டை கோபுரமாகத் திகழ்கிறது. கடைவீதியையொட்டி இருக்கிற இந்த கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் நீண்ட விஸ்தாரமான பாதையில் நான்குகால் மண்டபம் அமைந்திருக்கிறது.

அடுத்து ராவணன் வாசல் என்று சொல்லப்படும் இரண்டாவது கோபுர வாசல் உள்ளது. இந்த இடத்தில் வெளிப்பிரகராம் அமைந்திருக்கிறது. இந்தப் பிராகாரத்தில் எந்தத் தலத்திலும் இல்லாத வகையில், அரிதினும் அரிதாக இருக்கிறது எமன் சந்நிதி.

கொஞ்சம் பள்ளமாகவும் குடைவரைக்கோயிலாகவும் அமைந்திருக்கிறது எமதருமனின் சந்நிதி. சோமாஸ்கந்தர் வடிவில் சிவனாரும் அம்பாளும் நடுவில் முருகப்பெருமானும் இருக்க, சுவாமியின் திருப்பாதத்துக்குக் கீழே, ஒரு குழந்தையின் வடிவில் எமதருமன் காட்சி தருகிறார்.

திருக்கடையூர், ஸ்ரீவாஞ்சியம் போலவே திருப்பைஞ்ஞீலி தலத்துக்கும் எமதரும ஸ்தலமாகப் போற்றப்படுகிறது இந்தத் தலம். திருக்கடையூர் க்ஷேத்திரத்தில், மார்க்கண்டேயனுக்காக எமதருமனை காலால் உதைத்து சம்ஹரித்தார் சிவபெருமான். பிரம்மா இருந்தால்தான் படைப்புத் தொழில். எமன் இருந்தால்தான் மரணம். எமனை சம்ஹரித்ததால் இறப்பு என்பதே உலகில் இல்லாமல் போனது.

இதனால் பூமியில் மனித பாரம் ஏறிக்கொண்டே போனது. பூமாதேவி சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள். தேவர்களும் முனிவர் பெருமக்களும் முறையிட்டார்கள். எமதருமனை உயிர்ப்பியுங்கள். எமனை மன்னித்து உலகை வாழவையுங்கள் என வேண்டினார்கள். அதன்படி, சிவபெருமான் எமனுக்கு உயிரூட்டினார். குழந்தையாக தன் பாதத்தில் இருத்தி அருளினார். தர்மத்தைக் காப்பாயாக என வரம் தந்தார்.

அப்படி எமனுக்கு அருளிய தலமாகப் போற்றப்படுகிறது திருப்பைஞ்ஞீலி. திருக்கடையூர் போலவே திருப்பைஞ்ஞீலியிலும் சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் பரிகார ஹோமங்கள், சதாபிஷேகம் முதலான வைபவங்கள் நடத்தப்படுகின்றன. அப்படி நடத்துவது இங்கே விசேஷமாகப் போற்றப்படுகிறது.

அதுமட்டுமா? இன்னொரு சிறப்பும் இந்தக் கோயிலுக்கு உண்டு.

சனீஸ்வர பகவானுக்கு அதிபதி எமதருமராஜன். இங்கே, திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் எமதருமனுக்கு சந்நிதி இருப்பதால், சனீஸ்வரரை உள்ளடக்கிய நவக்கிரகத்துக்கு சந்நிதி இல்லை. மாறாக, ராவண கோபுர வாசலை அடுத்து சுவாமியை தரிசிக்கச் செல்லும் போது ஒன்பது படிக்கட்டுகள் இருக்கின்றன. இந்த ஒன்பது படிக்கட்டுகளும் நவக்கிரகங்களாகவே திகழ்கின்றன என்றும் இந்தப் படிகளைக் கடந்து சிவ சந்நிதிக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு கிரக தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பதும் உறுதி என்கிறார் கோயிலின் சங்கர குருக்கள்.

சிவனாரின் சந்நிதிக்கு எதிரில் நந்தி உள்ளது. நந்திக்கு அருகே ஒன்பது குழிகள் இருக்கின்றன. இந்த ஒன்பது குழிகள் தீபமேற்றி, நவக்கிரக வழிபாடாகச் செய்கிறார்கள் பக்தர்கள்.

திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்தால் கல்யாண பாக்கியம் கைகூடும். நீண்ட ஆயுளுடன் வாழலாம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும்!Source link

Continue Reading

ஆன்மிகம்

அப்பர் பெருமானுக்கு அன்னமிட்ட சிவன்! 

திருப்பைஞ்ஞீலி தலம் கல்யாண வரம் தரும் தலம். அதேபோல், தனம் தானியம் பெருக்கித் தரும் தலம் என்றும் இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும் தலம். இழந்ததையெல்லாம் மீட்டுக் கொடுக்கும் தலம்.

திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஞீலிவனநாதர். ஸ்ரீநீலகண்டேஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு. அம்பாளின் திருநாமம் ஸ்ரீவிசாலாட்சி.

Source link

Continue Reading

ஆன்மிகம்

பட்ட கஷ்டமெல்லாம் போக்கும் திருமாந்துறை! | thirumandurai

திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்ளுங்கள். குறிப்பாக, மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது. மூல நட்சத்திர நாளில், இங்கு வந்து தரிசனம் செய்வது மகத்தான பலன்களைத் தரும். இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் ஆம்ரவனேஸ்வரர்.

மாமரங்கள் சூழ்ந்த வனத்தில் சிவபெருமான், முனிவருக்கு திருக்காட்சி தந்தருளிய தலம் என்பதால் இந்தத் தலத்துக்கு மாந்துறை என்று பெயர் அமைந்தது. சுவாமிக்கு ஆம்ரவனேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. ஆம்ரவனேஸ்வரர் எனும் கோயிலின் ஸ்தல விருட்சம் மாமரம்.

திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமாந்துறை. தலத்தின் நாயகி ஸ்ரீபாலாம்பிகை. சக்தி வாய்ந்தவள் என்று அம்பாளைப் போற்றுகின்றனர்.

மிருகண்டு முனிவர் தவமிருந்து சிவனாரின் அருளைப் பெற்ற திருத்தலம். ஆதிசங்கரர் இந்தத் தலத்துக்கு வந்து சிவபெருமானையும் பாலாம்பிகையையும் தரிசித்து வழிபட்டுள்ளார் என்கிறது ஸ்தல புராணம்.

மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் ஈசனின் அடிமுடியைத் தேடிய கதை தெரியும்தானே. அப்போது, சிவபெருமானின் முடியைக் கண்டேன் என்று பொய் சொன்னார் பிரம்மா. இதனால் சாபத்துக்கு ஆளானார். இந்த சாபத்தைப் போக்கிக் கொள்ள பிரம்மா வழிபட்ட தலம் எனும் பெருமையும் ஆம்ரவனேஸ்வரர் கோயிலுக்கு உண்டு.

தட்சன் தான் நடத்திய யாகத்திற்கு சிவனாருக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், அந்த யாகத்திற்கு சூரியன் சென்றதால், சிவ சாபத்துக்கு ஆளானார். பிறகு சூரிய பகவான், சிவபெருமானை தவமிருந்து வழிபட்டு, சாப விமோசனம் பெற்றார். அப்படி சூரிய பகவான், சிவனாரை நோக்கி தவமிருந்ததும் சாப விமோசனம் பெற்றதுமான திருத்தலம் திருமாந்துறை என்கிறது ஸ்தல புராணம்.

அப்பர் பெருமானாலும் ஞானசம்பந்தர் பெருமானலும் பாடப் பட்ட புண்ணிய க்ஷேத்திரம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள். திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலுக்கு வந்து சிவனாரையும் அம்பாளையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால் போதும்… வாழ்வில் சகல பாவங்களையும் போக்கியருளுவார்கள் அம்மையும் அப்பனும்!

திருமாந்துறை திருத்தலம் இந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலமும் கூட. இங்கே உள்ள காவேரி தீர்த்தமும் காயத்ரி தீர்த்தமும் விசேஷமானவை என்று கொண்டாடப்படுகிறது. கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் திகழ்கிறது ஆலயம். கைத்தடியுடன் நிற்கும் சுந்தரர் அற்புதமாகக் காட்சி தருகிறார். நவக்கிரக சந்நிதியில், சூரிய பகவான் தன் இரண்டு மனைவியருடன் காட்சி தருவதும் காணக்கிடைக்காத ஒன்று. மேலும் சூரிய பகவான் தனியே நின்றபடியும் காட்சி தருகிறார். சூரியன் வழிபட்டு அருள்பெற்ற தலம் என்பதால்தானோ என்னவோ, நவக்கிரகத்தில் சூரியனாரைப் பார்த்தபடியே மற்ற கிரகங்கள் அமைந்திருக்கின்றன.

கிழக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிக்கிறார் ஆம்ரவனேஸ்வரர். சூரிய பகவான், இறைவனின் சந்நிதியில் வந்து வணங்கும் தலங்கள் பல உண்டு. பங்குனி மாதத்தின் முதல் மூன்று நாட்கள் சூரியக்கதிர்கள், சிவலிங்கத் திருமேனியைத் தழுவும் காட்சி சிலிர்க்கவைக்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்ளுங்கள். குறிப்பாக, மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது. மூல நட்சத்திர நாளில், இங்கு வந்து தரிசனம் செய்வது மகத்தான பலன்களைத் தரும். இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் ஆம்ரவனேஸ்வரர்.Source link

Continue Reading

Trending