செய்திப்பிரிவு

-->

Last Updated : 22 Aug, 2022 06:26 AM

Published : 22 Aug 2022 06:26 AM
Last Updated : 22 Aug 2022 06:26 AM

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அப்ரிடி விலகியுள்ளது இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் ஒரே பிரிவில் இடம்பெற்று இருக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ம் தேதி துபாயில் நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் மோதவுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி காயம் காரணமாக இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஷாஹின் அப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஷாஹின் அப்ரிடி விலகியுள்ளது இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “ஷாஹின் அப்ரிடி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியிருப்பது இந்திய அணியின் முதல் வரிசை பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதியாக இருக்கும். ஆசிய கோப்பையில் அப்ரிடியை காண முடியாதது வருத்தம்தான். விரைவில் அவர் உடல் தகுதியை எட்ட வாழ்த்துகிறேன்” என்றார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை குறைத்து மதிப்பிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் வக்கார் யூனிஸுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.Source link