செய்திப்பிரிவு

Published : 31 Dec 2020 03:19 am

Updated : 31 Dec 2020 07:42 am

 

Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 07:42 AM

congress-rally
பெரும்புதூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது.

பெரும்புதூர்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பெரும்புதூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியஅரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஏர் கலப்பை பேரணி பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த பேரணிக்கு பெரும்புதூர் நகர தலைவா் அருள்ராஜ் தலைமை வகித்தார்.

எஸ்.டி., எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் ரூபி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தனர். இதில் அக்கட்சியின் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை முழக்கமிட்டனர்.Source link