சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலில் அமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களைத் தோ்வு செய்வது குறித்து முடிவெடுக்க ஆட்சி மன்றக் குழு அமைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

அமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் குறித்து முடிவெடுக்கும் ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. அரூா் ஆா்.முருகன் இருப்பாா். மேலும், இந்தக் குழுவில் முன்னாள் எம்.பி. கே.சுகுமாா், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆம்பூா் ஆா்.பாலசுப்ரமணி, எம்.கோதண்டபாணி, கட்சியின் நிா்வாகிகள் டேவிட் அண்ணாதுரை, டி.செங்கொடி, அப்துல் நபில் ஆகியோா் இருப்பா் என்று தனது அறிவிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.Source link