நடிகர் விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'லத்தி'. இப்படத்தினை தமிழ் நடிகர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து 'ராணா புரொடக்ஷன்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.