Connect with us

தொழிற்நுட்பம்

விவசாயிகளுக்காக எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்த ஸ்டார்ட் அப் நிறுவனம்!

விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தற்போது எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து துறைகளின் மேம்பாட்டிலும் தொழில்நுட்பம் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, மனிதர்களின் வேலையை எளிதாக்குவதற்கு தொழில்நுட்பம் அதிகம் உதவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் டெல்லியில் தானியங்கும் மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், விவசாயிகள் தங்கள் பணியை மேலும் எளிதாக்கும் வகையில் Monarch Tractor என்ற எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் டிராக்டர் 40 குதிரைத்திறன் கொண்டது. மேலும், 70 குதிரைத்திறன் வரை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை மாற்றும் வசதியும் இந்த டிராக்டரில் காணப்படுகிறது. உங்களுக்கு தேவையான வேகத்தில் இயக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், ஓட்டுநர் இல்லாமல் கூட இதனை இயக்க முடியும். இதில் சென்சார் மற்றும் கேமரா வசதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகள் பூச்சி மருந்து தெளிப்பதற்கும் இந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற தொழில்நுட்பங்களால் விவசாயத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source link

தொழிற்நுட்பம்

`நாங்கள் எதையும் அறிய விரும்பவில்லை… சிக்னல் செயலி சி.இ.ஓ ஓபன் டாக்!

யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை என சிக்னல் மெசஞ்சரின் சி.இ.ஓ அருணா ஹார்ட்டர் தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப் செயலிற்கு நிகராக சிக்னல் என்ற செயதி தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் செயலியாக அசுர வளர்ச்சியடைந்துள்ளது. சிக்னல் செயலி குறித்து சிக்னல் மெசஞ்சரின் தலைமை நிர்வாக அதிகாரி அருணா ஹார்டர் தெரிவிக்கையில், நாங்கள் வளர்ச்சியை எதிர்பார்த்தோம், ஆனால் இந்த வகையான எழுச்சியை யாரும் கணித்திருக்க முடியாது என்றார். சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தியா தற்போது சிக்னலின் வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது.

நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஆதரவை பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நம்பமுடியாத வளர்ச்சியைக் கையாள நாங்கள் இப்போது உள்கட்டமைப்பை அளவிடுகிறோம், அனைவரும் தொழில்நுட்பத்தில் கைகோர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்திய மக்கள் எதிர்பார்க்கும் உயர் தரத்திற்கு ஏற்ப சேவையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

வாட்ஸ்அப் கொள்கையைப் பற்றி எழுந்துள்ள கூக்குரல் தனியுரிமை என்பது மக்களுக்கு முக்கியமானது என்பதை தெளிவுபடுத்துகிறது. பேஸ்புக்கின் வருவாய் மாதிரியானது அதன் பயனர்களின் தரவை சேமித்து வைப்பதன் மூலம் இயக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம், எனவே வாட்ஸ்அப் சேவை விதிமுறைகளுக்கான இந்த புதுப்பிப்பு தற்போதைய நேரத்தின் ஒரு விஷயம் மட்டுமே. இது மிகவும் சிக்கலான கொள்கை மற்றும் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்று நான் கருதுகிறேன் என்றார். மக்கள் எளிமையை விரும்புகிறார்கள். எனவே, மில்லியன் கணக்கானவர்கள் சிக்னலை மாற்றியுள்ளனர்.

சிக்னல் செயலியின், வாடிக்கையாளர்களின் தரவு சேமிக்கப்பட்டாது. நாங்கள் எதையும் அறிய விரும்பவில்லை, நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள், அல்லது எத்தனை செய்திகளை அனுப்புகிறீர்கள், உங்கள் சுயவிவரப் படம் எப்படி இருக்கும் என்று கூட தெரிந்து கொள்வதில்லை. உங்கள் தரவு உங்களுக்காக மட்டுமே. இதன் பொருள் யாருக்கும் விற்க எங்களிடம் தரவு இல்லை. இதன் விளைவாக, எங்களிடம் உள்ளதை வாங்க மூன்றாம் தரப்பினரும் ஆர்வம் காட்டவில்லை, ஏனென்றால் எங்களிடம் எதுவும் இல்லை. உங்கள் உரையாடல்கள் உங்களுக்கும் நீங்கள் யாருடன் பேசுகிறீர்களோ அவர்களுக்கிடையில் மட்டுமே என்றும் தெரிவித்தார்.

Source link

Continue Reading

தொழிற்நுட்பம்

வாட்ஸ் அப் கணக்கு நீக்கப்படாது: மே 15 வரை கால அவகாசம் | ‘No Account Will Be Suspended’: Whatsapp Defers 8 Feb Deadline

தங்களுடைய நிபந்தனைகளை ஏற்காத கணக்குகள் பிப்ரவரி 8-ம் தேதியன்று முடக்கப்படும் என்று தெரிவித்திருந்த வாட்ஸ் அப், தனது முடிவில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிந்துகொள்ள ஏதுவாக மே 15 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பின் மாற்றி அமைக்கப்பட்ட நிபந்தனைகளில், ஃபேஸ்புக்குடன் தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுவது தொடர்பான அம்சமே அதிகம் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிபந்தனைகள் பிப்ரவரி 8-ம் தேதி அன்று அமலுக்கு வருவதாகவும், வாட்ஸ் அப் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் உண்டான சர்ச்சையை அடுத்து, புதிய நிபந்தனை மாற்றம் வாட்ஸ் அப் வர்த்தக சேவை தொடர்பானது என்றும், பயனாளிகள் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் வாட்ஸ் அப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

எனினும் வாட்ஸ் அப் பயனர்களின் தனியுரிமைப் பாதுகாப்பு குறித்த கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்களுடைய நிபந்தனைகளை நிற்காத கணக்குகள் பிப்ரவரி 8-ம் தேதியன்று முடக்கப்படும் என்று தெரிவித்திருந்த வாட்ஸ் அப், தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. பயனர்கள் தங்களுடைய புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிந்துகொள்ள ஏதுவாக மே 15 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (ஜன.16) வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பயனர்களின் வாட்ஸ் அப் கணக்கு பிப்ரவரி 8 அன்று முடக்கவோ, தற்காலிகமாக நீக்கவோ படாது. இது தொடர்பாகப் பரவி வரும் பல்வேறு தகவல்கள் உண்மையல்ல. அவை தவறானவையே. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும்.

புதிய அப்டேட்டில் எவ்வாறு தரவுகள் சேகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பை இப்போது எல்லோரும் வணிகப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்துவதில்லை என்பதால், வருங்காலத்தில் இன்னு அதிகப் பயனர்கள் வணிகப் பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைக்கிறோம். இதனால் புதிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்துப் பயனர்கள் அறிந்துகொள்ள போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Source link

Continue Reading

தொழிற்நுட்பம்

சிக்னல் செயலியை பயன்படுத்தப்போகிறீர்களா? இவற்றைத் தெரிந்து கொள்ளுங்க!

வாட்ஸ்அப் செயலியின் தனி காப்புரிமை கொள்கை மாற்றப்பட்டதால் பல பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செய்தி செயலிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் சிக்னல் (Signal) செயலியை பயன்படுத்த இருந்தால் இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

ஸ்கிரீன் லாக்

உங்கள் ஸ்மார்ட்போனிலுள்ள சிக்னல் செயலியை யாரும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு செட்டிங்ஸ் பிரிவிலுள்ள ஸ்கிரீன்லாக் என்ற அம்சத்தை பயன்படுத்தவும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி தங்கள் செயலியை பூட்ட முடியும்.சிக்னல் செட்டிங்ஸ்>பிரைவசி>ஸ்கிரீன் லாக் என்ற வழிமுறையை பயன்படுத்தி இவ்வசதியை செயல்படுத்தலாம்.

பதிவு குறியீடு

வாட்ஸ்அப்பின் இரண்டு படி உறுதிப்பாட்டை போன்றது பிரிரிஜிஸ்டிரேஷன் PIN ஆகும். இந்த PIN நீங்கள் மாற்றாவிட்டால் அப்படியே தொடரும். சிக்னல் செயலியை மறுபடியும் நிறுவும் அவசியம் ஏற்பட்டால் அல்லது பேக்அப் மற்றும் தரவுகளை மீட்பதற்கு இந்த PIN கண்டிப்பாக தேவைப்படும்.சிக்னல் செட்டிங்ஸ்>பிரைவசி>ரிஜிஸ்ட்ரேஷன் PIN
குறிப்பிட்ட அரட்டையை ‘பின்’ செய்தல் சிக்னல் செயலியில் ஸ்டார்டு மெசேஜ் என்னும் வசதி இல்லை. ஆனால், பதிவுகளை மேலே ‘பின்’ (Pin) செய்து வைக்கும் வசதி உள்ளது. நான்கு செய்திகள் வரை இப்படி ‘பின்’ செய்யலாம். குழுக்களிலும் (groups) இவ்வசதியை பயன்படுத்த முடியும். ஆனால் ‘பின்’ செய்யப்பட்ட செய்தியை அழித்தால், ‘பின்’ செய்யப்பட்ட இடத்திலும் அழிந்துவிடும்.

சாட்டை அழுத்தி பிடிக்கவும்>ரிபன் மெனுவின் மேலே உள்ள PIN ஐகானைஅழுத்தவும்
தொடர்பு பட்டியலில் உள்ளவர்களும் சிக்னலும்உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள் சிக்னல் செயலியை தரவிறக்கம் செய்தால் உங்களுக்கு ஓர் அறிவிக்கை வரும். இது தொல்லையாக தெரியும். இதை தவிர்க்க இந்த அம்சம் செயல்படுவதை நிறுத்திவைக்கலாம். செட்டிங்ஸ்>நோட்டிஃபிகேஷன்ஸ்>கான்டாக்ட் ஜாயிண்ட் சிக்னல்>டர்ன் ஆஃப்

முகங்களை அழித்தல்

ஒரு படத்தை அனுப்புவதற்கு முன்பு முகங்களை தெளிவில்லாத தோற்றத்திற்கு மாற்ற சிக்னல் செயலி பயனர்களை அனுமதிக்கிறது.
சாட் விண்டோவை திறக்கவும்>ஏதாவது ஒரு படத்தை தெரிவு செய்யவும்>பிளர் (blur) என்ற ஐகானை அழுத்தவும்.

படங்கள் தாமாக அழிதல்

ஒரு படம் ஒரு முறை மட்டுமே பார்க்கப்படும் வசதியை பயன்படுத்த முடியும். யாருக்கு அனுப்புகிறோமோ அவர் ஒருமுறை பார்த்தபிறகு அந்தப் படம் அனுப்பியர், பெற்றவர் இருவருக்கும் தானாகவே அழிந்துவிடும்.அனுப்பக்கூடிய படத்தை தெரிவு செய்யவும்>இன்ஃபினைட் ஐகானை அழுத்தவும்>1X என்ற வசதியை தெரிவு செய்யவும்.

தொடர்புகளை பரிசோதித்தல்

முக்கியமான தகவல்களை கையாளும் பயனர்கள், தாங்கள் அவற்றை இன்னொருவருக்கு அனுப்பும் முன்பு அவர்களை பரிசோதித்து உறுதி செய்யும் கொள்ளும்படி சிக்னல் செயலி அறிவுறுத்துகிறது. இது என்கிரிட் முறையில் செய்திகளை அனுப்புவதுடன் இன்னொரு படி பாதுகாப்பை அளிக்கிறது.

சாட் விண்டோவை திறக்கவும்>தொடர்பு பட்டியலில் தொடர்பாளர்களின் பெயரை அழுத்தவும்>பாதுகாப்பு எண்ணை பார்க்கவும்.இப்போது மற்ற நபரின் சாதனத்தோடு எண்ணை இணைக்கவும் அல்லது அவர்கள் போனில் தெரியும் QR Codeஐ ஸ்கேன் செய்யவும்.

இன்காக்னிடோ (incognito) கீபோர்டு

நீங்கள் சிக்னல் செயலியை பயன்படுத்தும்போது விசைப்பலகை செயலிகள் (Keyboard apps) வார்த்தைகளை படிப்பதை தடுக்கும்படி இந்த அம்சம் கேட்கும். இவ்வசதி விசைப்பலகைகள் தரவுகளை சேகரிப்பதை தடுப்பதோடு தரவு தனியுரிமையை மேம்படுத்தும்.

Source link

Continue Reading

Trending