மதுரை : கொரோனா ஊரடங்கால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஆக.,31) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால் விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர்களை பல வடிவங்களில் உருவாக்கி மக்கள் வழிபடுவர். கொரோனா ஊரடங்களால் 2 ஆண்டுகள் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தாணடு விநாயகர் சதுர்த்தியை உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராகினர்.

இதற்காக மதுரை விளாச்சேரியில் 3 முதல் 15 அடி உயரம் வரையிலான களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன.பிச்சை, விஜயகுமார் கூறியதாவது: வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்பாகவே ஆர்டர்கள் வந்துவிடும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை உத்தரவு இருந்ததால் இந்த ஆண்டு ஆர்டர்கள் மிகவும் குறைவாகவே வந்தன.விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு பின்பு ஏராளமானோர் ஆர்டர் கொடுத்தனர்.

சமீப நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிலைகளில் ஈரம் காயவில்லை. சிலைகள் காய்ந்தால்தான் அதில் பெயின்ட் அடிக்க முடியும். ஊர்வலத்திற்கு நாட்கள் மிகக் குறைவாக இருப்பதால் மின்விசிறி மூலம் காயவைத்து வருகிறோம்.கடந்த ஆண்டுகளில் வழக்கமாக தயாரிக்கப்படும் பல்வேறு வடிவ விநாயகர் சிலைகளுடன் இந்த ஆண்டு புதிதாக அன்ன விநாயகர், சிம்மாசன விநாயகர், கருடாழ்வார் விநாயகர், யாழியில் பெண் வடிவ விநாயகர் சிலைகள் தயாரிக்கிறோம், என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link