துபாய்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்கின்றன. இப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாபர் அஸம், விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தனது பேட்டியில், “வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல. எல்லா இடங்களிலும் சவால்கள் உள்ளன. வாழ்க்கையில் நீங்கள் எப்படி சாதிக்கிறீர்கள், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி சமாளிப்பது என்பது உங்களுடையது. எனினும், இன்னும் உலக கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர்களில் ஒருவர் விராட் கோலி. அவரைப் போன்ற ஒரு வீரருக்கு எதிராக நீங்கள் எவ்வாறு போட்டியிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். வெற்றி, தோல்விகள் என்று மட்டும் இல்லை. வாழ்க்கையில் அடிக்கடி உங்களுக்குச் சாதகமாக நடக்காத விஷயங்களைக் கையாள உங்களுக்கு வலிமையான மனநிலை தேவை” என்று பாபர் அஸம் தெரிவித்துள்ளார்.Source link