பெண்ணாடம்-பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் முன்மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆதிவரதராஜ பெருமாள், சந்தானகிருஷணர், கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் உற்சவர் சுவாமிகளுக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. 8:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link