பார்சிலோனா: பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ராபர்ட் லெவான்டோவ்ஸ்கியின் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வாட்ச் திருடு போனது. பயிற்சிக்கு முன்னதாக லெவான்டோவ்ஸ்கி, ஆட்டோகிராப் போட்டபோது அவரிடம் வாட்ச்சை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

33 வயதான கால்பந்து ஸ்டிரைக்கரான லெவான்டோவ்ஸ்கி, நேற்று முன்தினம் பார்சிலோனாவில் பயிற்சிக்கு சென்றார். அப்போது ரசிகர்கள் அவரை தடுத்து நிறுத்தி ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது இளைஞர் ஒருவர் லெவான்டோவ்ஸ்கியை அணுகினார். திடீரென அந்த இளைஞர் லெவான்டோவ்ஸ்கியின் கையில் கட்டியிருந்த வாட்ச்சை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.

லெவான்டோவ்ஸ்கி, அந்த இளைஞரை காரில் துரத்திச் சென்றார். ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை. பறிபோன லெவான்டோவ்ஸ்கியின் வாட்ச்சின் விலை சுமார் ரூ.74 லட்சமாகும். இதுதொடர்பாக கேட்லான் போலீஸில் புகார் செய்யப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீஸார் ஒரு மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்தனர். மைதானத்தின் புதருக்கு பின்புறம் ஒளிந்திருந்த 19 வயது இளைஞரை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து வாட்ச்சை பறிமுதல் செய்தனர்.Source link