சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வலதுகரமாக விளங்கிய லெனின், பொதுவுடமைக் கொள்கையில் உறுதியாக நின்றவர். தமிழர் நலனுக்காக போராட்டக் களத்தில் நின்ற உயர்ந்த லட்சியவாதி அவர். ஓர் இயற்கை மருத்துவரும் ஆவார். லெனின் மறைவு தமிழ்நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கும். பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். லெனின் எந்த லட்சியங்களுக்காகப் போராடினாரோ அவற்றை தொடர்ந்து நிறைவேற்றுவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.