Connect with us

விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்ஸன் கேப்டனாக நியமனம்; ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து நீக்கம்: விடுவிக்கப்பட்ட 8 வீரர்கள் யார்? | IPL 2021: Samson named RR captain, Smith released ahead of mini-auction

2021-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸன் கேப்டனாக நியமித்து ராஜஸ்தான் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் 17 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு 8 வீரர்களை விடுவித்துள்ளது. அதில் முக்கியமானவர் ஸ்டீவ் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணிக்கு வேண்டுமானால் ஸ்மித் சிறந்த கேப்டனாக இருந்திருக்கலாம். ஆனால், ராஜஸ்தான் அணிக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. கடந்த ஐபிஎல் தொடரில் கடினமாகப் போராடியும் ப்ளே ஆஃப் சுற்றை அடைய முடியவில்லை.

தனிப்பட்ட முறையிலும் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்த ஸ்மித், மற்ற போட்டிகளில் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து 311 ரன்கள் மட்டுமே தொடரில் குவித்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் ஸ்மித்தின் ஸ்ட்ரைக் ரேட் 131 ஆகவும், சராசரி 25 ஆகவும் சரிந்துவிட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு தொடரின்போது, ரூ.12.5 கோடிக்கு வாங்கப்பட்ட ராஜஸ்தான் அணிக்குப் பெரிய அளவில் ஸ்மித் கைகொடுக்கவில்லை. 2018-ம் ஆண்டு சீசனில் ஸ்மித் பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சை காரணமாக விளையாடவில்லை. ரஹானே கேப்டன்ஷிப்பில் ஓரளவுக்குச் சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் வரை 2018-ல் சென்றது.

ஆனால், ஸ்மித் வந்தவுடன் ரஹானே கழற்றி விடப்பட்டு, மீண்டும் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுவரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஸ்மித்தின் செயல்பாடு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் கடந்த இரு தொடர்களிலும் மனநிறைவாக இல்லை என்பதால், 2021-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஸ்மித் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஐபிஎல் தொடரில் மின்னல் வேகப்பந்துவீச்சு மூலம் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர், மேட்ச் வின்னராக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஆன்ட் ரூ டை, டேவிட் மில்லரும் அணியில் நீடிக்கின்றனர்.

புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சு சாம்ஸன் கூறுகையில், “உண்மையில் எனக்கு மிகப்பெரிய கவுரவமாக அமைந்துள்ளது. எனக்கு ராஜஸ்தான் அணி மிகவும் நெருக்கமானது. கடந்த சில ஆண்டுகளாக நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். என் முன் இருக்கும் சவால்களைத் திறமையாகச் சமாளிப்பேன் என நம்புகிறேன். சிறந்த வீரர்களான ராகுல் திராவிட், ரஹானே, ஸ்மித் ஆகியோருடன் இணைந்து விளையாடிய அனுபவம் எனக்குக் கை கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விவரம்

சஞ்சு சாம்ஸன், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேஷியா, மகிபால் லோம்ரார், கார்த்திக் தியாகி, ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கத், மயங்க் மார்கண்டே, யாஹஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், டேவிட் மில்லர், மனன் வோரா, ராபின் உத்தப்பா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

ஸ்டீவ் ஸ்மித், அங்கித் ராஜ்புத், ஓஸ்னே தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் கரன், அனிருத் ஜோஷி, சசாங் சிங்.Source link

விளையாட்டு

ஆரம்பமானது ஐபிஎல்2021! ரெய்னா ரெடி! ஓரங்கட்டப்பட்ட மலிங்கா, ஜேசன் ராய், டாம் பேண்டன் மற்றும் பலர்!

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அணி நிர்வாகம் தேவையான வீரர்களை தக்கவைத்து கொள்ளவும், மற்ற வீரர்களை விடுவிக்கவும் இன்றுடன் கால கெடு வைத்திருந்தது. மேலும் வரும் பிப்ரவரி மாதம் ஏலம் தொடங்கவிருப்பதால், அனைத்து அணி நிர்வாகமும் வீரர்கள் தேர்வில் மும்முரமாக இறங்கியுள்ளன. அதுமட்டுமின்றி பிசிசிஐ ஆணையத்திடம் இருந்து, அனைத்து வீரரகள் மற்றும் அணி நிர்வாகத்தினறுக்கும் மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட தொகையே இந்த ஆண்டும் தொடரும் என்று. இதனால் பல வீரர்கள் சந்தோஷத்திலும், சிலர் மன குமுறலிலும் உள்ளனர்.

சென்னை அணி

சென்னை அணியை பொறுத்தவரை கடந்த சீசன் அவர்களுக்கு, அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. எனவே எதிர்வரும் சீசனில் அவர்களின் பழைய அணியை மீட்டெடுக்க போராடுவார்கள். ஏற்கனவே ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்த நிலையில், அவர் அணியில் இருந்தீ ஓரங்கட்டப்பட்டார். மேலும் அவருடன் முரளி விஜய், கேதார் ஜாதவ், சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனுகுமார் சிங் மற்றும் வாட்சன் உட்பட ஆறு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத்

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியில் இருந்து பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் வார்னர் தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. இந்த அணியில் இருந்து பில்லி ஸ்டேன்லேக், ஃபேயன் ஆலன், சஞ்சய் யாதவ், சந்தீப் மற்றும் ப்ரித்வி ராஜ் ஆகிய ஐவர் வெளியேற்றப்பட்டனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து மட்டும் 10 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பின்ச், கிரிஸ் மோரிஸ், சிவன் துபே, மொயின் அலி, இசுரு உடானா, உமேஷ் யாதவ் போன்றோரும் ஆவர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இதுவரை எந்த வீரரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் கேப்டன் பொறுப்பானது சுமித் இடமிருந்து, இளம் அதிரடி வீரரான சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணியின் அணி இயக்குனராக மகிளா ஜெயவர்த்தனே அல்லது குமார சங்ககரா ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா அணியில் இருந்து டாம் பேண்டன், கிரிஸ் கிரீன் உட்பட நிகில் நாயக், சித்தேஷ் லெட், சித்தார்த் மற்றும் ஹரி குர்னியோடு ஆறு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து, அவர்களின் ஆஸ்தான பந்து வீச்சாளரான மலிங்கா வெளியேற்றப்பட்டார். மலிங்கா, நாதன் கோல்டர் நைல், ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் ஷெர்பான் ரூதர்போர்டு உட்பட ஏழு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

கடந்த சீசனில் இறுதி போட்டிக்கு முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், கீமோ பால், சந்தீப் லாமிசேன், மொகித் சர்மா மற்றும் தேஷ்பாண்டே ஆகிய ஆறு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Source link

Continue Reading

விளையாட்டு

இந்தியா முகத்தில் முட்டையை வீசியுள்ளது… `வருத்தப்படாத மைக்கேல் வாகன்!

டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் தனது முகத்தில் முட்டையை வீசியுள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும், இந்திய அணி 4 டெஸ்ட் போட்டியில் இமாலய வெற்றி பெற்றது. 2 – 1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியா தொடரை வென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா அணி தோல்வியடைந்ததும் ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்லும் என நான் ஏற்கனவே தெரிவித்தேன். ஆனால், இந்தியா இந்தத் தொடரில் கம்பேக் கொடுக்கும் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. இந்தத் தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் என் முகத்தில் இந்திய வீரர்கள்முட்டையை வீசியுள்ளார்கள் என்றார்.

சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் என இளம் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது அனைத்தும் நல்லதுக்குதான். நான் அதை எண்ணி வருந்தவும் இல்லை. நான் சொன்னது தவறு என்பதில் எனக்கு துளி அளவும் வருத்தம் இல்லை என்றார்.

https://tamil.thesubeditor.com/news/cricket/28241-michael-vaughan-talks-about-indian-cricket-team-test-win.html

Source link

Continue Reading

விளையாட்டு

இது முதல்முறை அல்ல, ஆனால் வெற்றி பிரமிப்பானது!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 1996-1997 முதல் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆலன் பார்டர் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் 10000 ரன்களை கடந்தனர். இவர்களின் சாதனையைப் போற்றும் வகையில் இந்த இரு அணிகளுக்கும் இடையே இந்த தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு மற்றும் 2010 ல் நடந்த தொடர்களும் நான்கு போட்டிகளுக்கும் குறைவாகவே தொடர் அமைக்கப்பட்டது. பின்னர் அனைத்து தொடர்களும் நான்கு போட்டிகளைக் கொண்ட தொடராகவே நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொடரில் வெற்றிபெறும் அணியிடம் கோப்பை வழங்கப்படும், பின்னர் அடுத்த தொடரை வெல்லும் அணி, தோல்வி அடைந்த அணியிடம் இருந்து கோப்பையை பெற்றுக் கொள்ளும். இதுவரை பார்டர் கவாஸ்கர் தொடரானது 15 முறை விளையாடப்பட்டு, அதில் 10 தொடரில் இந்திய அணியும், 5 தொடரில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த 2020-2021 தொடரின் வெற்றி மட்டும் ஏன் இவ்வளவு விமர்சையாக கொண்டாடப்படுகிறது?

15 தொடரில் 10 தொடரை வென்றிருந்தாலும், இந்த 2020-2021 தொடர் மட்டும் இவ்வளவு விமர்சையாக கொண்டாடப்படப் பல காரணங்கள் உள்ளது. இந்த தொடரின் வெற்றி வெற்றியாளர்களால் மகுடம் சூடப்பட்டதல்ல, பல கனவுகளைச் சுமந்து வெற்றி வேட்கையோடு பல தடைகளைத் தகர்த்தெறிந்து களத்தில் புகுந்துள்ள ஊர்க்குருவிகளின், ஆகாயம் தேடும் தேடலின் முதல் படியின் இமாலய வெற்றி. அதனால் தான் அனைத்து தரப்பினராலும் வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒருநாள் போட்டி தொடரை இழந்தாலும், அடுத்த இருபது ஓவர் தொடரை வென்று, தன்னம்பிக்கையோடு டெஸ்ட் தொடரில் களமிறங்கியது இந்திய அணி. நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டி கோலி தலைமையில் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சை சிறப்பாக தொடங்கினாலும், இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் மிகப்பெரிய அவமானத்தோடு, தோல்வியையும் தழுவியது இந்திய அணி. இந்த போட்டி முடிந்தவுடன் கோலி தனது முதல் குழந்தை பிறப்பு காரணமாக தாயகம் திரும்பினார்.

டாஸில் வெற்றி பெறாத ரகானே!

பின்னர் நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பொறுப்பு கேப்டனாக விளையாடிய ரகானே, ஒரு போட்டியிலும் டாஸ் வெற்றி பெறாமல், இரண்டு போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டியை டிராவில் முடித்து காட்டியுள்ளார். வெற்றியின் ஒரு புள்ளி தான் டாஸ் நிர்ணயிக்கும், என்பதனை இந்த தொடரில் இருந்து அறிந்து கொள்ளலாம். கோலியின் இல்லாமை, இஷாந்த் ஷர்மா, பும்ரா, அஷ்வின், விஹாரி என அடுத்தடுத்த வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற இனி அணியின் நிலைமை யாருமறியாத கேள்விக்குறியாகவே இருந்தது.

எதிரணியை உசுப்பேற்றல், நிறவெறி ஆகியவற்றை கையிலெடுத்த ஆஸ்திரேலியா அணி!

இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 1-1 என்று சமநிலை படுத்தியது. அடுத்து மூன்றாவது போட்டியில் களமிறங்கிய இந்திய அணியை, ஆஸ்திரேலியா அணியினர் வழக்கம்போல் அவர்களின் பாணியில் எதிரணியினரை களத்தில் வெறுப்பேற்றி வெற்றி பெறும் உத்தியை கையில் எடுத்தனர். ஆனால் இளம் வீரர்களின் பாணி அவர்களின் அனுபவத்தை மிஞ்சி அனைவரும் வியக்கும் வகையில் இருந்தது. களத்தில் எதிரணி வீரர்களுடன் வாய் சவடால் விடமால், தனது திறமையின் மூலம் பதிலளித்து அசத்தினார் இளம் காளைகள். இந்நிலையில் இந்திய வீரர்களின் மீது நிறவெறியை நெருப்பு பிழம்போல் உமிழத்தொடங்கினர் ஆஸ்திரேலியா ரசிகர்கள். சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோரை குரங்கு என எல்லை மீறி விமர்சித்த ரசிகர்களுக்கு நீங்காத பரிசை அளித்தனர் இந்திய அணியினர்.

புஜாரா, விஹாரி, அஸ்வின், பும்ரா விலகல்?

மூன்றாவது போட்டியை டிரா செய்ய போராடிய இந்திய அணியில் அனைவரையும் மலைக்கவைத்த, புஜாரா, விஹாரி மற்றும் அஷ்வின் என அனைவரும் பல தடைகளையும் மீறி நிதானமாக விளையாடி, அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுத்து போட்டியை டிராவில் முடித்தனர். இந்த போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் பிரிஸ்பேனில் உள்ள காப்பா ஆடுகளத்தில் நடந்த நான்காவது போட்டியில் இவர்கள் யாரும் விளையாடவில்லை.

அனுபவத்தை, தன்னம்பிக்கையால் வென்றெடுத்த இளம் படையினர்!

இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில், நான்காவது போட்டி காப்பாவில் தொடங்கியது. இந்த போட்டியில் ரகானே, ரோகித் சர்மா ஆகியோரை தவிர்த்து மற்ற அனைவரும் இளம் வீரர்கள் தான். மேலும் பந்து வீச்சாளர்களில் பெரும்பாலானோர் இந்த தொடரில் களம் கண்டவர்கள். முதல் இன்னிங்சில் 33 ரன்கள் முன்னிலையோடு, இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி. ஒரு கட்டத்தில் மிகப்பெரிய இலக்கை ஆஸ்திரேலியா அணி முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த மிகப்பெரிய படையை தனது பவுன்சர் கணைகளால் நிலைகுலைய வைத்த முகமது சிராஜ் 73/5 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் நம்பிக்கையை சற்று உயர்த்தினார். பின்னர் 327 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

ஜாம்பவான்களின் கருத்தை கானலாக்கிய காவிய வீரர்கள்!

முதல் டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய தோல்வியை தழுவிய, இந்திய அணியால் மீளவே முடியாது, இதுவே இந்திய அணியை ஓயிட்வாஷ் செய்ய சரியான தருணம் ன ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் அனைவரும் கருத்து கணிப்பு என்ற பெயரில், ரிக்கி பாண்டிங் முதல் மைக்கேல் கிளார்க் வரை அனைவரும் இந்திய அணியின் தன்னம்பிக்கையை உடைக்கும் முயற்சியில் இறங்கினார். பிரிஸ்பேனில் கடந்த 30 ஆண்டுகளாக தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியா அணியை, அதன் ராஜ்ஜியத்தில், அந்த அணியின் கணமான மகுடத்தை, வெற்றி என்ற ஆருடம் ஏந்திய இளம் வீரர்களால் நொறுக்கப்பட்டு, வரலாற்றை மீண்டும் திருத்தி எழுதியது இந்திய அணி.

31 ன் கணத்தை தாங்காத 1042!

ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்ற பந்து வீச்சாளர்கள் அனைவரும் அனுபவசாலிகள் மட்டும் அல்ல பல முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனைகளை படைத்தவர்கள். இவர்களின் ஒட்டுமொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையே 1042. ஆனால் இந்திய அணியில் இடம்பெற்ற பந்து வீச்சாளர்களில சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் இந்த தொடரில் மட்டுமே முதன் முதலில் களமிறங்கினர். இவர்களுடன் ஷர்துல் தாக்கூர் மற்றும் சைனியும் பெரிய அனுபவம் இல்லாத வீரர்கள் ஆக இந்த வீரர்களின் மொத்த விக்கெட் எண்ணிக்கை வெறும் 31 மட்டுமே. இந்த அணிதான் பெரிய ஜாம்பவான்களை கொண்ட அணியை தவிடு பொடியாக்கி அரியணையில் ஏறி அமர்ந்தது.

இப்படிப்பட்ட வெற்றியை கொண்டாடி தான் ஆக வேண்டும். வாழ்த்துக்கள் இந்திய அணி.

Source link

Continue Reading

Trending