எஸ்.எஸ்.ராஜமௌலி, சிரஞ்சீவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் மணிரத்னம்.
'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைபில், படத்தின் இரண்டாவது பாடலான 'சோழா சோழா' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.