சென்னை: ராகுல்காந்தி நடைபயணத்தை ஒருங்கிணைக்க 18 பேர் தலைமையில் குழுக்களை அமைத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ேக.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணம் தொடங்குகிறார். இதற்காக 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தமிழக ஒருங்கிணைப்பாளராக டாக்டர் கே.ஜெயக்குமார், எம்.பி., இருப்பார். வரவேற்புக் குழு- விஜய் வசந்த் எம்பி, தங்கும் வசதி ஏற்பாட்டுக் குழு-எஸ்.ஜோதிமணி எம்பி, பொதுக்கூட்ட ஏற்பாட்டு குழு-டாக்டர் ஏ.செல்லக்குமார் எம்பி, நிகழ்ச்சி கண்காணிப்பு குழு- சுதர்சன நாச்சியப்பன், மக்கள் தொடர்பு குழு-சி.டி.மெய்யப்பன், நடைபயண அலங்கார குழு-கிறிஸ்டோபர் திலக். மக்களை திரட்டும் குழு-மயூரா எஸ்.ஜெயக்குமார், விளம்பர பொருட்கள் விநியோக குழு- எம்.கே. விஷ்ணு பிரசாத், எம்.பி., நிதிக் குழு- ரூபி மனோகரன் எம்எல்ஏ, ஊடகம் மற்றும் விளம்பர குழு-ஆ.கோபண்ணா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு- பொன்.கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து குழு-ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் ஒருங்கிணைப்பு-செங்கம் ஜி.குமார், முன்னணி அமைப்புகள் ஒருங்கிணைப்பு குழு- வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், துறைகள் மற்றும் பிரிவுகள் ஒருங்கிணைப்பு-எம்.பி.ரஞ்சன் குமார், சமூக ஊடக குழு-க.தி.லஷ்மி காந்தன், அரசு அனுமதி பெரும் குழு-வழக்கறிஞர் சந்திரமோகன், உணவு குழு-எஸ்.பவன் குமார் ஆகியோர் இருப்பர்.

Source link