நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 2வது சுற்று போட்டிகள் இன்று நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில்  6ம் நிலை வீராங்கனையான பெலாரசின்  24 வயதான அரினா சபலென்கா 2-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் 37 வயதான எஸ்டோனியாகையா கனேபியை போராடி வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். செக் குடியரசின் 30 வயது கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-2 என்ற செட் கணக்கில், சகநாட்டைச் சேர்ந்த மேரிபவுஸ்கோவாவை சாய்த்தார்.அமெரிக்காவின் 28 வயதான டேனியல் காலின்ஸ், 6-2, 7-5 என ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்ஸாவையும், 28 வயது ஸ்பெயினின் முகுருசா, 6-0, 6-4 என செக்குடியரசின் லிண்டாவையும், பிரான்சின் கிளாராபுரல் 6-4, 4-6, 6-4 என  பெல்ஜியத்தின் அலிசன் வானையும் வீழ்த்தினர். முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சையும், குரோஷியாவின் பெட்ரா மார்டிக், 6-7, 6-1, 6-2 என 4ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவையும் வென்றனர். ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னியுடன் இன்று மோதினார். இதில் முதல் செட்டை இழந்த 2-6 என இழந்த நடால், அடுத்த 3 செட்டை 6-4,6-2, 6-1 என கைப்பற்றி 3ம் சுற்றுக்குள் நுழைந்தார்.

Source link