நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், பெலாரசின் 33வயதான விக்டோரியா அசரென்கா 6-1, 4-6,6-2 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் ஆஷ்லின்க்ரூகரை வீழ்த்தினார். செக்குடியரசின் 26 வயதான கேத்ரினா சினியாகோவா, 6-4,4-6,6-2 என அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டையும், ஜெர்மனியின் 23 வயது ஜூலிநிமியர் 7-6,6-4 என அமெரிக்காவின் சோபியா கெனினையும், ஒலிம்பிக் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் 25வயதான பெலின்டா பென்சிக் 6-2,4-6,6-4 என ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிச்சையும்,  குரோஷியாவின் பெட்ரா மார்டிக், 6-4,7-6 என  ரஷ்யாவின் வர்வரா கிராச்சேவாவையும் வீழ்த்தினர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் 19 வயதான எம்மா ராடுகானு, 3-6,3-6 என்ற செட் கணக்கில் பிரான்சின் 32 வயதான அலிஸ் கார்னெட்டிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து முதல் சுற்றுடன் வெளியேறினார். முன்னாள் சாம்பியனான 42 வயது வீனஸ் வில்லியம்ஸ் 1-6,6-7 என பெல்ஜியத்தின் அலிசன் வானிடம் தோல்வி அடைந்தார். கஜகஸ்தானின் யூலிகா புடின்ட்சோவா, 4ம் நிலை வீராங்கனையான  ஸ்பெயினின் பவுடா படோசா, செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா, பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். ஆடவர் ஒற்றையரில் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் நடால், 4-6,6-2,6-3,6-3 என ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகாடாவை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Source link