டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் கிராஸ் 1.5 லிட்டர் ஹைபிரிட் இன்ஜின் கொண்டது. சர்வதேச சந்தையில் இது விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் அடுத்ததாக அர்பன் குரூசர் ஹைரைடர் என்ற மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதேநேரத்தில், சர்வதேச சந்தையில் உள்ள யாரிஸ் கிராஸ், டெல்லி குருகிராமில் சோதனை ஓட்டம் நடத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. முழுவதும் கருப்பு நிற ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும் யாரிஸ் கிராஸ், இந்தியச் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த கார் இந்தியச் சாலைகளில் சோதனை ஓட்டம் நடத்துவது இதுவே முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அர்பன் குரூசர் ஹைரைடர், யாரிஸ் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இந்தியச் சந்தையில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வாகன சந்தையினர் தரப்பில் கூறப்படுகிறது.

Source link