மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய ஏஎம்ஜி இகியூஎஸ் 53 என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலேயே அதிக விலையில் உள்ள எலக்ட்ரிக் கார் இதுதான். ஷோரூம் விலையாக ரூ.2.45 கோடி என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எஸ் கிளாஸ் செடானை அடிப்படையாக கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த காரின் மிகப்பெரிய அம்சமாக, 56 அங்குல எம்பியுஎக்ஸ் ஹைபர் ஸ்கீனைத்தான் கூற வேண்டும். எளிதில் உடையாக கொரில்லா கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ள இது. 3டி மேப், கேமிங் வசதிகளுடன் அசத்தலாக அமைந்துள்ளது. இந்த காரில் 107.8 கிலோ வாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற்றுள்ளது. 200 கிலோவாட் வரை அதிவேக சார்ஜிங் செய்யலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 580 கி.மீ தூரம் வரை செல்ல முடியும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

Source link