இஸ்லாமிய நாட்காட்டியில் முதலாவது மாதம் முஹர்ரம். இது முஸ்லிம்களின் வரலாற்றிலும் வாழ்க்கையிலும் செல்வாக்கு பெற்ற மாதம். முஹமது நபி (ஸல்) அவர்களும், தீர்க்கதரிசிகளும், மற்ற தூதர்களும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லப்படு கிறது. எனினும், ஷீஆ முஸ்லிம்கள் இதனைத் ‘துக்கமான’ மாதம் என்கின்றனர்.
கி.மு.680-ல் கர்பாலா போரில்72 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். கடைசி இறைத்தூதர் ஹளரத் முஹம்மத்(ஸல்) பேரர் ஹளரத் இமாம் ஹூசைன் கர்பாலா போரில் கொல்லப்பட்டார். அவருடன் 71 பேர் யஜீதின் ராணுவத்தினரால் முஹ்ர்ரம் மாதம் 10-வதுநாளில் கொல்லப்பட்டனர். இமாம்ஹூசைனின் 6 மாத மகன் அஸ்கரும் அந்த நாளில் கொல்லப் பட்டார்.