[ad_1]

தேவையான பொருட்கள்:

முட்டை -5,
பச்சை மிளகாய்- 3,
தேங்காய்த் துருவல் -½ கப்,
சீரகம் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
வாழை இலை – 1,
சாம்பார் வெங்காயம் – 10.

செய்முறை:

பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம், வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். இட்லி பாத்திரத்தில் நீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். தண்ணீர் சூடான பிறகு, முட்டைக்கலவையை இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து அதன் மீது ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க அருமையான முட்டை இட்லி ரெடி. சாதத்துடன் தொட்டுக் கொள்ளப் பரிமாறலாம்.

[ad_2]

Source link