செய்திப்பிரிவு

-->

Last Updated : 28 Aug, 2022 04:05 AM

Published : 28 Aug 2022 04:05 AM
Last Updated : 28 Aug 2022 04:05 AM

சென்னை

மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநகர போக்குவரத்துக் கழகத் தொழில் பயிற்சி நிறுவனம் சென்னை, குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் அங்கீகாரம் (என்சிவிடி) பெற்ற இந்நிறுவனத்தில், 2 ஆண்டு கால மோட்டார் வாகன மெக்கானிக் பிரிவில் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இங்கு இதுவரை 1,292 மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இங்கு பயின்ற மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது 2022-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்களை முதல்வர், மாநகர போக்குவரத்துக் கழகத் தொழிற்பயிற்சி நிலையம், மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை 600044 என்ற முகவரியிலும், www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் others—– Download என்ற பகுதியிலும் பெறலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற 044 2953 5177, 94450 30597 ஆகிய எண்களிலும், mtciti591@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Source link