high_court

கோப்புப் பட்ம்

 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் வன்புணர்வோ, கொலையோ இல்லை  என ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி உறுதியாவதாக உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் மரணமடைந்தாா். இதுதொடா்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவ குழுக்களின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி கருத்து கனியாமூர் பள்ளி மாணவி மரணம் வன்புணர்வோ, கொலையோ இல்லை  என உறுதியாவதாக உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

கனியாமூர் பள்ளி மாணவி இறப்பு வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகளுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார் நீதிபதி இளந்திரையன். 



Source link