வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: மணிப்பூரில் பா.ஜ., வுக்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி விலக்கிக் கொண்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த மார்ச்சில் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில், 32 தொகுதிகளில் பா.ஜ. வென்றது. பா.ஜ., கூட்டணி ஐக்கிய ஜனதாதளம் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து பா.ஜ., கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இருந்தது. முதல்வராக பைரன் சிங் பதவியேற்றார்.
![]() |
இந்நிலையில் பீஹாரில் பா.ஜ.,, ஐக்கிய ஜனதா தள கூட்டணி முறிந்தது. ராஷ்ட்ரீய ஜனாத தள கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைத்தது. இதையடுத்து மணிப்பூரில் பா.ஜ.வுடான கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகவதாக இன்று நிதிஷ்குமார் அறிவித்தார். நிதிஷ் கட்சி ஆதரவை விலகியதால், பா.ஜ. ஆட்சிக்கு ஆபத்தில்லை. பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என அம்மாநில முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement