மகிந்திரா நிறுவனம் புதிய பொலிரோ மேக்ஸ் பிக் அப் வேனை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.7.68 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெட் லாம்ப், முன்புற கிரில், பம்பர் போன்றவை மேம்படுத்தப்பட்ட தோற்றத்தை கொண்டுள்ளன. இதில் உள்ள ஐமேக்ஸ் டெலிமேட்டிக்ஸ், இயக்க செலவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த டெலிமேட்டிக் சிஸ்டத்தை மொபைல் ஆப்ஸ் மூலம் கட்டுப்படுத்தலாம். பொருட்களை டெலிவரி செய்ய திட்டமிடல், நேவிகேஷன், டிராக்கிங், ஜியோ பென்சிங் உட்பட 30 வகையான ஸ்மார்ட் அம்சங்கள் இதில் உள்ளன. இதில் உள்ள எம்2டிஐ இன்ஜின் அதிகபட்சமாக 65 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. 1.3 டன் சரக்குகளை ஏற்றிக் செல்லலாம். ஒரு லிட்டருக்கு 17 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source link