பெராரி நிறுவனம் 296 ஜிடிபி என்ற ஹைபிரிட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள 3.0 லிட்டர் டிவின் டர்போ சார்ஜ்டு இன்ஜின் அதிகபட்சமாக 654 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதிலுள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 166 எச்பி பவரை வெளிப்படுத்தும், இரண்டும் சேர்த்து அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 830 எச்பி பவரையும், 6,350 ஆர்பிஎம்-ல் 740 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த கார் 2.9 நொடிகளில் 100 கி.மீ வேகத்தையும் 7.3 நொடிகளில் 200 கி.மீ வேகத்தையும் வெளிப்படுத்தும். எலக்ட்ரிக் மோடில் அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரையிலும், அதிகபட்சமாக 135 கி.மீ வேகம் வரையிலும் செல்லும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

Source link