பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையை ஒட்டி, பல்லாவரத்தில் 2 பகுதிகளாக உள்ளது புத்தேரி. இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று, அப்பகுதி மக்கள்பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.இதையடுத்து, தெற்கு பகுதியில் உள்ளஏரியை ரூ.30 லட்சம் செலவில், நகராட்சி நிர்வாகம் புனரமைத்தது. வடக்குபகுதியில் உள்ள ஏரியை, பல்லாவரத்தை சேர்ந்த, ‘பசுமை பெருக சுத்தம் செய்’ என்ற அமைப்பு, பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ. 10 லட்சம் செலவில் தூர்வாரிஆழப்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு, வடக்கு பகுதியில்உள்ள ஏரியில், மர்ம கும்பல் ஒன்றுஇரவோடு இரவாக, 20-க்கும் மேற்பட்டலோடு குப்பையை ஏரியில் கொட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை நடைபயிற்சி சென்ற பொதுமக்கள், குப்பை கொட்டப்பட்டதை அறிந்து அங்கு கூடினர். பின், குப்பை கொட்டியதைக் கண்டித்தும், மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு நடவடிக்கையில் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சமூக ஆர்வலர்கள், போலீஸாரின் செயலைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். அதன்பின், ஏரியில்கொட்டப்பட்ட குப்பையை அகற்றுவதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம்குப்பை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சந்தானம் கூறியதாவது: நீர்நிலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் இது நடந்துள்ளதாகத் தெரிகிறது. நீர்நிலையை பாழ்படுத்திய சமூக விரோதிகளை கண்டுபிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றார்.



Source link