[ad_1]

தேவையான பொருட்கள் :

கறுப்பு புட்டரிசி – 500 கிராம்
சர்க்கரை (Sugar) – 1 கிலோ
தேங்காய்ப்பால் – 250 மில்லி லிட்டர்
பாதாம்பருப்பு –    20
முந்திரிப்பருப்பு –  10
ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
நெய் –  250 மில்லி லிட்டர்

செய்முறை:

புட்டரிசியை ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டு, மாவாக்கிக் கொள்ளவும்.பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து, தனியே வைக்கவும். கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை கலந்து கொதிக்க வைத்து, கம்பி பதமாக பாகு காய்ச்சவும். அதன்பின் அரிசிமாவை கொஞ்சம், கொஞ்சமாக போட்டுக் கிளறவும். அதன்பின் தேங்காய்பால் ஊற்றி, கிளறவும். அனைத்தும் கலந்து கெட்டியானதும் நெய் ஊற்றி, வறுத்த முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, மற்றும் ஏலக்காய் பொடி போட்டு, அல்வா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

[ad_2]

Source link