மேடான பகுதியில் தனது பழ வண்டியை தள்ள முடியாமல் தவித்த பெண் ஒருவருக்கு மழலை மனம் மாறாத இரண்டு பள்ளிக் குழந்தைகள் ஓடி வந்து உதவி செய்யும் வீடியோ இணைய வெளியில் பலரது நெஞ்சங்களை கவர்ந்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்கள் சர்வ பலமும் கொண்ட கருவியாக உள்ளது. பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாது சமயங்களில் உத்வேகமும் தருகிறது அதில் பதிவிடப்படும் பதிவுகள். சில பதிவுகள் சமூக வலைதள பயனரின் நெஞ்சுக்குள் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் இளம் குழந்தைகளின் கன்டென்டுகளுக்கு தனி இடம் இருப்பதுண்டு. அவர்களது பால் மனம் மாறாத குழந்தைத்தனம் மற்றும் அவர்களிடத்தில் காணப்படும் கருணையையும் அனைத்து வயதினரும் கற்க வேண்டிய ஒன்று என்பதை அந்த வீடியோக்கள் நினைவு செய்வதும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு வீடியோவை ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் மேடான சாலை ஒன்றில் தனது பழ வண்டியை தள்ள முடியாமல் தவிக்கிறார் பெண் ஒருவர். அவரை கடந்து பலர் சென்றாலும், உதவ யாரும் முன்வரவில்லை. அப்போது அந்த வழியாக சீருடை அணிந்தபடி செல்லும் இரண்டுக் குழந்தைகள் அந்த பெண்ணுக்கு வண்டியை மேலே தள்ள உதவுகின்றனர். பின்னர் தனக்கு உதவிய குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை உபசரிக்கிறார் அந்த பெண். அந்த வண்டியில் கைக்குழந்தை ஒன்றும் துயில் கொண்டுள்ளது.

இந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்ட நொடி முதல் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்றுள்ளது. சுமார் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனை லைக் செய்துள்ளனர்.Source link