சென்னை: இளநிலை பட்டப் படிப்புகளில் 2-வது பருவத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தை பல்கலைக்கழகங்கள் சேர்க்க வேண்டும் என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் கற்றுத் தரப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் 2-ம் பருவத் தேர்வில் தமிழ்மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், சில கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம் நடத்தப்படவில்லை என புகார்கள் எழுந்தன. இதையடுத்து 2-ம் ஆண்டு பருவத்தில் தமிழ் மொழி பாடத்தை அவசியம் அமல்படுத்த வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு உயர்கல்வித் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துவிதமான பல்கலைக்கழகங்களிலும் (அண்ணா மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நீங்கலாக) இளநிலை பட்டப் படிப்புகளில் 2-ம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சில பல்கலை.களில் தமிழ் மொழி பாடம் நடத்தப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையை மாற்றி, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவத் தேர்வுகளிலும் இனி தமிழ் மொழி பாடத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப இளநிலை பட்டப் படிப்புகளில் 2-ம் ஆண்டு பருவத்தில் இனி தமிழ்மொழி பாடத்திட்டத்தை சேர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை பல்கலைக் கழகங்கள் எடுக்க வேண்டும்.Source link