பஜாஜ் நிறுவனம் ஏற்கெனவே சிடி100 பைக்கை அறிமுகம் செய்து, சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இதன் மேம்பட்ட அம்சங்களுடன் புதிய சிடி125எக்ஸ் என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் வட்ட வடிவ ஹெட்லாம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், ரப்பர் டேங்க் பேட் உட்பட பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. பாதுகாப்பு அம்சத்தை பொறுத்தவரை, கம்பைன்டு பிரேக் சிஸ்டம் உள்ளது. கருப்பு – பச்சை, கருப்பு  – நீலம், கருப்பு – சிவப்பு ஆகிய இரட்டை வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் உள்ள 124.4 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 10.7 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 11 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் துவக்க விலையாக சுமார் ₹71,354 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source link