பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்தும் பேசுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தென்மா இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. யாழி ஃபிலிம்ஸ் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’படத்தின் சிறப்புக்காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படம் பார்துவிட்டு வெளியே வந்தததும், அனுராக் காஷ்யப் பா.ரஞ்சித்தை கட்டியணைத்து, “நீங்கள் எடுத்ததிலேயே இதுதான் சிறந்த படம்” என்று இயக்குநர் பா.இரஞ்சித்தை பாராட்டியுள்ளார். இயக்குநர் நீரஜ் கெய்வான், “சினிமாவின் வடிவத்தை முற்றிலுமாக மாற்றி எடுத்திருக்கும் வகையில், பா.இரஞ்சித்தின் முக்கியமான ஒரு திரைப்படமாக இருக்கும்” என்று கூறியதோடு படத்தில் நடித்திருக்கும் கலைஞர்களையும் பாராட்டி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.Source link