சென்னை: இந்தியச் சந்தையில் நாய்ஸ்ஃபிட் (NoiseFit) கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகியுள்ளது. 50 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் அசத்தலான அம்சங்களை உள்ளடக்கி இந்த வாட்ச் வெளிவந்துள்ளது. இதன் விலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பார்ப்போம்.

நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்பட்களை வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் Wearable டிவைஸ்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் நாய்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், நாய்ஸ்ஃபிட் கோர் 2 என்ற ஸ்மார்ட்வாட்ச்சை இந்நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கலர்ஃபிட் அல்ட்ரா 2 பஸ் வாட்ச்சை இந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அம்சங்கள்: வட்ட வடிவில் இந்த வாட்ச் வெளிவந்துள்ளது. இதன் திரை அளவு 1.28 இன்ச் உள்ளது. எல்.சி.டி டிஸ்பிளே இதில் இடம்பெற்றுள்ளது. 240X240 பிக்சல் ரெசல்யூஷன், ஹார்ட் ரெட் டிரேக்கிங் இதில் உள்ளது. அதோடு சுவாசம், தூக்கம் மற்றும் ஸ்ட்ரெஸ் போன்றவற்றையும் இது கணக்கிடும் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

230mAh பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் எனவும் நாய்ஸ் தெரிவித்துள்ளது. 2 மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்து விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட போன்களில் இதனை பேர் (Pair) செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபி68 வாட்டர்-ரெசிஸ்டண்ட் ரேட்டிங் கொண்டுள்ளது இந்த வாட்ச். கேமரா, மியூசிக், அலாரம் போன்றவற்றை இந்த வாட்ச் மூலம் கன்ட்ரோல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வண்ணங்களில் இந்த வாட்ச் கிடைக்கிறது. நாய்ஸ் நிறுவனத்தின் வலைதளம் மற்றும் பிளிப்கார்ட் மூலம் இதனை பெற்றுக் கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.3,999. இருப்பினும் அறிமுக சலுகையாக இந்த வாட்ச் ரூ.1,799-க்கு கிடைக்கிறதாம்.Source link