சென்னை: சுதந்திர போராட்ட தியாகி பூலித்தேவனின் 307வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துணை தலைவர் கரு.நாகராஜன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஐ.கருப்பையா, பசும்பொன் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழகத்தின் நிகர வருமானம்  குறைந்துள்ளதற்கு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்  பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு என  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்வதற்கு என்ன உரிமை உள்ளது. என்னை  மிரட்டி பார்த்தால், இப்படி தான் பதில் இருக்கும். மிரட்டி பார்க்க  நாங்கள் வரவில்லை.

நான் தன்மானம் இருக்கும் அரசியல்வாதி. அரசியலில்  இல்லாவிட்டால் ஆடு, மாடு  மேய்த்து கொண்டு, வயலில் இறங்கி என்னால் வேலை  பார்க்க முடியும். வீட்டிற்கு  வெளியே கயிற்று கட்டிலை போட்டு படுத்து  உறங்க முடியும். ஆனால், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் வீட்டை, விட்டு  வெளியே வந்து இதனை செய்ய  முடியுமா, என்னை அடித்தால் மறு கன்னத்தை  காட்டுவதற்கு இயேசு அல்ல. என்னை  அடித்தால் நான் திருப்பி அடிப்பேன் என்றார்.

Source link