[ad_1]

தேவையான பொருட்கள்:

நாட்டுகோழி  1 கிலோ
சின்ன வெங்காயம்  300 கிராம்.
இஞ்சி  3 சிறிதளவு
மிளகு  6 தேக்கரண்டி
சீரகம்  4 தேக்கரண்டி
சோம்பு  2 தேக்கரண்டி
கசகசா  2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்  6
புதினா  சிறிதளவு
மல்லி தழை  சிறிதளவு
கறி வேப்பிலை  சிறிதளவு
தயிர்  3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு  4 தேக்கரண்டி
நல்லெண்ணெய்  தேவையான அளவு
உப்பு  தேவையான அளவு

செய்முறை

நாட்டுகோழிக்கறியை நன்கு கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும். மிளகு, சீரகம், சோம்பு, கசகசாவை வறுத்து அரைக்கவும். பிறகு, கோழிக்கறியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகு சீரகம், சோம்பு, கசகசா, தயிர்,
எலுமிச்சை சாறு, உப்பு போட்டு நன்கு பிசைந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், ஊற வைத்திருக்கும் கோழி மசாலாவை போட்டு வதக்கவும். தீயை மிதமாக வைக்கவும். 5 நிமிடம் கழித்து தீயை சிம்மில் வைக்கவும். நீர் ஊற்ற வேண்டாம். கோழிக்கறி 15 நிமிடத்தில் வெந்து விடும். நல்ல வறுவல் வேண்டுமெனில் ஒரு 5-10 நிமிடம் அடுப்பில் வைத்திருக்கலாம். இறக்கி, மல்லி தூவி அலங்கரிக்கவும். சுவையான நாட்டுகோழி மிளகு வறுவல் தயார்.

[ad_2]

Source link